Posts

வாராயோ மீண்டும்...!

காசைத் தேடி  கால்கள் நடக்கையில் ஓசை படாது  ஓடி ஒளிந்தாள்  கூட நடந்த  கவிதைப் பெண்!   காதல் தோல்வியில்  நெஞ்சோடு தாங்கியவள்  கண்ணீர் துளிகளை  கவிதை வரியாக்கியவள்!   தனிமையில் தவித்த போது  இனிய உறவாய்  இதயத்தில் நடந்தவள்  இமைகள் உறங்க  தமிழால் தாலாட்டியவள்!    திசைகள் தோறும்  தேடிப் பார்க்கிறேன்  வீசும் தென்றலிடம்  விசாரணை செய்கிறேன்  யாரும் அறியவில்லை  உன்னை!   போதும் உன் புலம்பல்  என ஓடி வாராயோ​? காயங்கள் தோறும்  ஒத்தடங்கள் தாராயோ?    உன் தடம் பிடித்து  நிற்கிறேன்  என்னை உன்னிடம்  சேர்க்கிறேன்!   பெண்ணெ போகாதே எனை விட்டு... போகுமே என்  கவிதைச் செடி பட்டு...    மொட்டு விடட்டும்  மறுபடியும்  எனக்குள் கவிதை  எனைச் சுட்டு  எரிக்கும் போதும்  நீங்காதிருப்பது  உனக்கினி கடமை!

அன்னைக்கு ஒரு ஆறுதல்!

கார்த்திகை 27, 2014 அன்று படித்த கவிதை. வணக்கம் அன்னை தமிழுக்கு வணக்கம் தாய் மண்ணிற்கு வணக்கம் தலைவன் தாளிற்கு வணக்கம் மற வீரா் கல்லறைக்கு வணக்கம் அநாதையாகி நிற்கும் பெண்ணே… ஆதியிலே இருந்தவரெல்லாம் பாதியிலே போவார் என்று யாரேனும் சொன்னதுண்டா? வீதியிலே நிற்கின்றாயே அம்மா… விதி வந்து நின்றால் கலங்க மாட்டோம் சதி செய்து வாசலில் நின்ற பகை முற்றத்தில் பாய்ததே அம்மா…! கக்கத்தில் இருந்த பிள்ளையும் கருவிலே உருவான மகவும் சொர்க்கத்தில் கட்டாய இடம் தேடிக் கொண்டன! கற்றைக் கூந்தலது வாரி பல வண்ணப் பூக்கள் அதில் சூடி நெற்றித் திலகமது ஒளிர மங்களமாய் நின்ற பெண்ணே… சொந்தங்களை நீ இழந்தாய் மடி நிறையக் கொண்ட செல்வமதுவும் இழந்தாய் துடிப்பாய் நின்று உன் மானம் காத்த மறவரையும் இழந்தாய் தூய தமிழ்ப் பேச்சினை இழந்தாய்! துட்டர்களின் “பூட்ஸ்” கால்களின் அடியில் மிதிபட்டுக் கிடக்கின்றாயே அம்மா… உன் கண்ணின் ஈரம் எப்படித் துடைப்போம்? உன் நெஞ்சின் பாரம் எப்படிச் சுமப்போம்! ஈழத் தாயே உன்னிடம் பெற்...

விழும் இலைகள்!

Image
விழுந்த இலைகளை எண்ணி விழாத இலைகள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை! நாளையோ மறுநாளோ அவையுடன் அவையும்!

கோடுகள்

Image
கோடுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் ஓவியத்தை தேடுகிறேன்… சிறு கை கொண்டு இவள் கிறுக்குகையில் பல விதக் கோடுகள் வந்து பென்சில் கூரோரம் குந்தியிருக்கும் “அடுத்து நான்…” எனக் கெஞ்சித் தவிக்கும்! உருவம் ஒன்றெண்ணி இவள் வரைவதில்லை வரைந்த பின்னால் காணலாம் பல நூறு உருவம் நம் கற்பனை விசாலமெனில்!

என்னத்தை சொல்ல...?

இடம் தெரியாா் தரம் புரியாா் தகுதி கிடையார் பதவி வேண்டி வலம் வருவார் கிடைக்காது போனால் முகம் சுளிப்பார் காறி உமிழ்வார் இச்சனம் போல் எங்கேனும் கண்டதுண்டா? இலக்கு தான் முக்கியம் நம்மவர் செருக்குக் காட்டி "அவனா தலைவன்..." என கவனில் கல் வைத்தடிப்பார்! எதிரில் பல் இழித்து "ஐயா உம் போல் எவருண்டு..." என்றே நெளிவார்! "எனக்கேன் இல்லை அழைப்பு?" என்றே ஆயிரம் கேள்வி தொடுப்பார் அழைத்தாலோ பல கதை சொல்லிப் புளுகுவார்! பிரிந்து நின்று பருந்து போல் மொய்கின்றார் கூடிச் சேர்ந்து எறும்பு போல் அணிவகுக்க மறுக்கின்றார்! கூடிப் பலர் தேர் இழுக்காவிடின் சாமிக்கேது ஊர்வலம்? ஆசாமி இவனே சாமி ஆக நினைத்தால் அதுவன்றோ அநியாயம்! நோக்கம் ஒன்று அதை நோக்கி நடத்தல் நன்று! தன்னால் இயன்றதை தான் செய்யின் எல்லாம் சரியாகும் முடியாது போனால் கை தட்டுங்கள் தானாய் நடக்கும் எல்லாம்!

பிள்ளைத் தமிழ்!

கற்ற தமிழ் நான் மறந்தேன் உன் பிள்ளைத்தமிழ் கேட்கையிலே! சொற் தமிழில் எத்தனை சுவை இறைவா இவள் சின்ன இதழில் அது பிறப்பதாலே! அப்பன் மடியில் அமர்ந்து பிரணவப் பொருள் உரைத்தான் பால முருகன் அன்று குப்பன் இவனும் இன்று அப்பேறு பெற்றானே ஆனால் பொருள் தான் எதுவும் விளங்கலையே! விளங்காத போதும் குறையாத இன்பம் எனக்குள் நிறைகிறதே வாழ்வதின் இன்பம் இது தான் எனப் புரிகிறதே!

அணையா(த்) தீ!

Image
நீ எந்தன் வானம் நான் உந்தன் நீலம் ஏனிந்தக் கோலம் என் உயிரின் ஓலம் கேட்காதோ உந்தன் காதும்? கனவில் வருகிறாய் மலர்கள் சொரிகிறாய் எதிரில் மட்டும் ஏனோ என்னை எரிக்கிறாய்! நெஞ்சத்தில் உன்னை வைத்தேன் தீயென்று தெரியாது விட்டேன் அணைப்பது எவ்வாறு நீ வந்து அணைத்தாலும் அணையாது வளரும் தீ இது!

இன்றைய பொங்கல்!

Image
நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மேலிருந்து சூரியன் பார்த்திருக்க சுற்றி நின்று சுற்றத்தார் காத்திருக்க முற்றத்தில் அடுப்பு மூட்டி புதுப் பானை அடுப்பேற்றி பொங்கியது உண்டு ஊரில்! அவ்வழக்கம் இங்கில்லை இப்போது! உள்வீட்டில் பொங்கல் பாவம் சூரியன் பல முறை எட்டிப் பார்த்தும் பொங்கல் பானை பார்க்கும் பாக்கியம் இல்லை அவனுக்கு! சுற்றத்தார் எங்கிருந்தோ குறுஞ்செய்தி, தொலைபேசி முகப்புத்தகம், ருவீட்டர் என பல வடிவில் "Happy Pongal" என்றார்! ஏன் பொங்குகிறோம் என்று அறியார் பலர் ஏதோ பொங்குகின்றார் ஏற்பாடுகள் ஏட்டிலே தங்கிவிட பொங்கல் பானையில் தங்கிவட உள்ளங்கள் பொங்குவதில்லை இங்கே உவகை அதில் நிறைவதில்லை பிள்ளை கேட்பான் "ஏன் அம்மா பொங்கல்?" அம்மாவுக்கே அது தெரியாத போது எங்கிருந்து அவள் உரைப்பாள் "அப்பாவிடம் கேள்..."  என்பாள் ஓடியே போவான் பாவம் அவன்!

கந்தக விரல்

Image
எங்கோ ஒரு மூலையில் சிரிப்பைத் தொலைத்து கந்தக விரலுக்கு சொந்தக் காரி ஆகிறாள் ஒருத்தி! வெடித்துச் சிதறும் பல வண்ணப் பட்டாசுகளை கண்டு துள்ளிச் சிரிக்கிறார் இங்கே பலர்! மறவாதீர் அவள் பட்டாசுகளில் பலவாறு சிரிக்கிறாள் சிறு நொடியில் சிரிப்பைத் தொலைத்தும் விடுகிறாள்! வாழ்க்கை எவ்வளவு முரண்பாடு ஒருத்தியின் சிரிப்பைத் தொலைத்த உதடுகளை பார்த்த பின்னும் எவ்வகைப் பட்டாசு வாங்கலாம் என்றே எண்ணமிடுகிறது மனசு!

கார்த்திகை இருபத்தேழு!

நெஞ்சங்கள் தோறும் ரணங்களைச் சுமந்து நிற்கின்றோம் கல்லறை வீரர் காலடி பணிகின்றோம் நாளிது கார்த்திகை இருபத்தேழு! களமாடி ஈழக் கடமை செய்த உயர் வீரா் நினைவேந்தும் நாள்! மாடி வீட்டில் இருந்து நாம் வேடிக்கை பார்த்தபோது ஓடி ஒளியாமல் வாடிச் சாகாமல் பகை தேடிப் புறப்பட்ட மற வீரர் நினைவை மனதில் ஏந்தும் நாள்! சிவப்புத் தோல் போர்த்திய நரிகள் தமைச் சிங்கங்கள் என்றெண்ணி எமைச் சூழ்ந்து அசிங்கங்கள் செய்த போது பாயும் புலியானவர்கள் பச்சைத் துரோகத்தால் பலியானவர்கள்! சாவை எந்நேரமும் சட்டைப் பையில் சுமந்தவர்கள் தலைவன் நாவை அசைத்தால் நாற்றிசையும் பாய்ந்து எம் மண்ணின் மானம் காத்தவர்கள்! முறத்தால் புலியை விரட்டினாளாம் பண்டைச் தமிழச்சி! எம் தலைவன் ஊட்டிய வீரத் திறத்தால் பகையை வாட்டினார்கள் எம் குலப் தமிழ்ப் பெண்கள்! பூச்சூடி பொட்டிட்டு பூவிதழில் புன்னகை மலரவிட்டு மென்மையின் வடிவானவர்கள் தாம்...

எரியட்டும் பெரு நெருப்பு!

Image
வீடெங்கும் ஒளி வெள்ளம் மலரட்டும் நமது உள்ளம் நரகாசூரா்கள் வெளியில் இல்லை உனக்குள்ளே சிரிப்பர் பல அசுரா்! தீபங்கள் பல பற்ற வை மள மளவென எரியட்டும் பெருந்தீயாய் பரட்டும் உள்ளமெனும் காடு எரிகின்றபோது மிருகங்கள் பல தெறித்தோடும்! இப்போது உனக்குள்ளும் கேட்கும் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை!

பழுத்த இலைகள்!

Image
உதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகள் வீதியெங்கும். இவைகளின் சோகம் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லை… சில சொற்களைச் சேர்த்துச் சும்மா விசிறியிருக்கிறேன். யாருக்கேனும் இந்த இலைகளின் விசும்பல் கேட்கிறதா? பழுத்த இலைகள் பாதை எங்கும் பரவிக் கிடக்கின்றன ஒய்யாரமாய் மேலிருந்து காற்று வந்து காதுகளுக்கிடையில் இரகசியம் சொன்ன போது மகிழ்ந்து சிரித்தவை தான்! இன்று கேட்பாரற்று கால்களுக்கிடையில் மிதி பட்டு முனகிக் கொண்டிருந்தன இளகிய சிந்தை உள்ள எவரேனும் குனிந்து குசலம் கேட்பாரோ என்று ஏங்கிக் கிடந்தன. வாழ்க்கை இப்படித்தான்! உயரத்தில் இருக்கும் போது அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்து விடுகிறது!

முத்த அறுவடை!

Image
கன்னத்தில் முத்தங்களை நான் விதைக்கிறேன்... எப்போதடி தொடங்கும் அறுவடைக் காலம்?   01 மாசி 2013

மழலையாகிறேன்…!

Image
அங்கும் இங்கும் தவழ்கின்றாள் ஆராய்ச்சி பல புரிகின்றாள்! எழுந்து நிற்க முயல்கின்றாள் விழுந்து பின் அழுகின்றாள்! ஆனாலும் மீண்டும் முயன்று பார்க்கின்றாள் விழ… விழ… எழுகின்ற குழந்தையின் செய்கை கண்டு நாமும் கற்க வேண்டிய பாடம் இதுவென உணர்கின்றேன்! உதடுகளுக்கிடையில் சிரிப்பை ஒளித்து வைக்கிறாள் எப்போது விடுவிப்பாள் என்று அவள் முகம் பார்த்த வண்ணம் நான்! அப்பன் என்னும் உறவெல்லாம் மறந்தே போச்சு நானும் மழலையாகிறேன் அவள் அருகிருக்கையில்!

அவள் உலகம்!

Image
என் உலகம் என் தோள் மேல் ஏறி தன் உலகம் பார்க்கிறது! உலகம் புரிபட்ட பின்னால்(ள்) உதறி நடக்குமோ உள்ளுக்குள் காயம் தருமோ நான் அறியேன்… சுற்றுலா வழிகாட்டி போல் அவள் வாழ்வின் வழிகாட்டி நான் அவ்வளவே! எனக்கே வாழ்வு புரிபடாத போது அவள் வாழ்விற்கு எப்படி காட்டுவேன் வழி? புரிபடாத ஒன்றை புாிந்தது போல் காட்டுவது தான் எத்தனை முரண்? தோளில் ஏற்றுவதோடு சரி அவள் வாழ்வை அவளே புரிந்து கொள்ளட்டும்! சொந்தப் புரிதல் காயப்படுத்தினாலும் உதடுகளுக்கு எப்போதும் புன்னகையை கற்றுத் தரும்!

சந்தோசம்!

Image
சந்தோசம் என்பது எங்கேயும் இல்லடா உனக்குள்ளே இருக்குது உனைப் பாத்துச் சிரிக்குது கை கூப்பி வணக்கம் சொல்லு!

போதையில் நதி!

Image
புதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்! போதையில் தள்ளாடியது நதி!

விட்டகலா நினைவுகள்!

Image
கவியரங்கம் ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை இது. ஒலி வடிவமும் அதன் கீழ் வாசிக்கும் வகையில் கவிதையையும் இணைக்கிறேன்.   தமிழ் வாழ்த்து தோற்றமறியோம் இவள் தொன்மை அறியோம் தோகை இள மயில் போல் இவள் காட்டும் அழகறியோம் மூத்த பெண்ணாம் எம் முகவரி இவளாம்! தாயே தமிழே வணங்குகிறேன் உனை இக்கவிக்கு உனைவிட்டால் வேறு யார் துணை! அறிமுகம் யார் இப்பயல் என நீவீர் கேட்டால் பதில் ஏதும் இல்லை என்னிடம்! அடியேனுக்கே அது தெரியாதபோது சபையோருக்கு எப்படி உரைப்பது? ஆனாலும் ஒரு குறிப்பு தமிழ் பழகும் மழலை போல எழுதுவேன் பல கவிதை இதுவென எழுந்தாடுவேன் ஆகா கவிதை இதுவென நீவீர் மெய்மறந்திருந்தால் மறு நிமிடம் கால் வாருவேன்! கடைசி வரை தமிழன் புத்தி அது வென்பதால் பிழை பொறுத்தருள்க என் கவிதைக்கு காது கொடுத்தருள்க! கேட்கக் கூடாத பலவற்றை கேட்ட காது தானே? கொஞ்சம் தமிழும் கேட்கட்டும் கொஞ்சும் தமிழும் கேட்கட்டும்...

காத்திருப்பு…! (வேறு)

Image
  ஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...! 14 ஆடி 2008

கசக்கி எறிந்த ஓவியம்!

Image
நீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம்! நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் துள்ளி வந்த கடல் அலை காணோம்! கடலை வண்டி தள்ளிப் போகும் வயசான கிழவர் இல்லை... அக்கம் பக்கம் பார்த்துவிட்டு முத்தமிடும் உன் குறும்பில் குங்குமமாய்ச் சிவக்கும் என் நிலா முகம் போனதெங்கே? கடற்கரை கிணற்றில் தண்ணீர் அள்ளிப் போகும் பெண்களின் பார்வை படாது என் முகம் மறைக்கும் உன் உருவம் கரைந்தது எப்படி? அடிக்கடி என் பெயரை உச்சரிக்கும் உதடுகள் கடற்கரை மணலிலும் எழுதிப் பார்த்த அழகு மறைந்தது எப்படி? வசதியாக இப்படிப் பல நினைவுகள் மறைந்து வரைந்த ஓவியம் எதற்கு என்று கசக்கி எறிந்தாயோ என் காதலனே?   09 புரட்டாதி 2008