எந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக்கிது எத்தனையாவது வருகையோ? கால் கொண்டு உதைக்கின்றாள் கை கொண்டு அடிக்கின்றாள் பூவுக்கு கை, கால் முளைத்ததென எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்! சிறு வாய் திறந்து கொட்டாவி விடுகிறாய் மெல்ல எட்டியே பார்க்கிறேன் நான் உலகமேதும் உள்ளிருப்பதாய் தெரியவில்லை - ஆனாலும் நீயே என் உலகமென ஆன விந்தையதுவும் புரியவில்லை! ஒலி வடிவம்: ------------------------ 09 புரட்டாதி 2012
Comments
அருமையான விளக்கமாக அமைந்த
கவிதையும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...