நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீரராய் ஆவதெப்போ? உள் மனதில் உறங்கிய கனவுகள் உயிர் பெற்று வாழ்வது தப்போ? கல் மனத்தார், கொலைக்கஞ்சார் கணப்பொழுதும் வாழ்தல் ஏற்போ? சொந்த ஊரில் சொற்பமும் சுகமாய் வாழமுடியாத வாழ்க்கை சத்தோ? சிறுமையும் பெருமையும் இடம் ஒவ்வா இடத்தில் உரைத்திடல் தகுமோ? சென்ற ஆண்டு சேர்த்து வைத்த சோகங்கள் வந்த ஆண்டு நீ தீர்த்து வைத்தல் வேண்டும் வருங்காலத்தில் ஓர் வலது காலாய் நீ தடம் பதித்தல் வேண்டும் பின்னும் நீ சமாதான வீணைகளை மன...
Comments
அருமையான விளக்கமாக அமைந்த
கவிதையும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...