குழந்தை பிறந்த போது…
எந்த ஜென்மத்து தொடா்போ
என் மடியில் தவழ்கின்றாள்
என் செல்வ மகள்
பூமிக்கு வந்த புது உயிர்
நீ என்று சொல்லத்தான் ஆசை…
ஆனாலும் உனக்கிது
எத்தனையாவது வருகையோ?
கால் கொண்டு உதைக்கின்றாள்
கை கொண்டு அடிக்கின்றாள்
பூவுக்கு கை, கால் முளைத்ததென
எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்!
சிறு வாய் திறந்து கொட்டாவி
விடுகிறாய்
மெல்ல எட்டியே பார்க்கிறேன்
நான்
உலகமேதும் உள்ளிருப்பதாய்
தெரியவில்லை - ஆனாலும்
நீயே என் உலகமென ஆன
விந்தையதுவும் புரியவில்லை!
ஒலி வடிவம்:
------------------------
09 புரட்டாதி 2012
Comments
மழலையின் வருகையும் தந்தையின் உணர்வையும் கவிதை சொல்லும் அழகு கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள்!