கசக்கி எறிந்த ஓவியம்!

நீ வரைந்த
கடற்கரை காட்சியில்
நம் காதலின்
சாட்சியாய் இருந்த
படகைக் காணோம்!

நாம் பேசிய
காதல் மொழி
கேட்க ஆர்வமாய்
துள்ளி வந்த
கடல் அலை காணோம்!

கடலை வண்டி
தள்ளிப் போகும்
வயசான கிழவர்
இல்லை...

அக்கம் பக்கம்
பார்த்துவிட்டு
முத்தமிடும்
உன் குறும்பில்
குங்குமமாய்ச் சிவக்கும்
என் நிலா முகம்
போனதெங்கே?

கடற்கரை கிணற்றில்
தண்ணீர் அள்ளிப் போகும்
பெண்களின் பார்வை படாது
என் முகம் மறைக்கும்
உன் உருவம்
கரைந்தது எப்படி?

அடிக்கடி என் பெயரை
உச்சரிக்கும் உதடுகள்
கடற்கரை மணலிலும்
எழுதிப் பார்த்த
அழகு மறைந்தது
எப்படி?

வசதியாக
இப்படிப் பல
நினைவுகள் மறைந்து
வரைந்த ஓவியம்
எதற்கு என்று
கசக்கி எறிந்தாயோ
என் காதலனே?

 

09 புரட்டாதி 2008

Comments

கவிதை அருமை கசக்கி எறிந்த காதலின் நினைவை அருமையாக மீட்டி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.
வாருங்கள் தனிமரம்! கருத்திற்கு நன்றி... தொடர்ந்து இணைந்திருங்கள்.
அழகிய கற்பனை வளம் வாழ்த்துக்கள் உங்களை இன்றய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர் .கவிதை கண்டு மகிழ்ந்தேன் உங்கள் முயற்சி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் !
http://blogintamil.blogspot.ch/2013/04/blog-post_5.html
அம்பாளடியாள்,

உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்...

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை