Posts

பழுத்த இலைகள்!

Image
உதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகள் வீதியெங்கும். இவைகளின் சோகம் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லை… சில சொற்களைச் சேர்த்துச் சும்மா விசிறியிருக்கிறேன். யாருக்கேனும் இந்த இலைகளின் விசும்பல் கேட்கிறதா? பழுத்த இலைகள் பாதை எங்கும் பரவிக் கிடக்கின்றன ஒய்யாரமாய் மேலிருந்து காற்று வந்து காதுகளுக்கிடையில் இரகசியம் சொன்ன போது மகிழ்ந்து சிரித்தவை தான்! இன்று கேட்பாரற்று கால்களுக்கிடையில் மிதி பட்டு முனகிக் கொண்டிருந்தன இளகிய சிந்தை உள்ள எவரேனும் குனிந்து குசலம் கேட்பாரோ என்று ஏங்கிக் கிடந்தன. வாழ்க்கை இப்படித்தான்! உயரத்தில் இருக்கும் போது அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்து விடுகிறது!

முத்த அறுவடை!

Image
கன்னத்தில் முத்தங்களை நான் விதைக்கிறேன்... எப்போதடி தொடங்கும் அறுவடைக் காலம்?   01 மாசி 2013

மழலையாகிறேன்…!

Image
அங்கும் இங்கும் தவழ்கின்றாள் ஆராய்ச்சி பல புரிகின்றாள்! எழுந்து நிற்க முயல்கின்றாள் விழுந்து பின் அழுகின்றாள்! ஆனாலும் மீண்டும் முயன்று பார்க்கின்றாள் விழ… விழ… எழுகின்ற குழந்தையின் செய்கை கண்டு நாமும் கற்க வேண்டிய பாடம் இதுவென உணர்கின்றேன்! உதடுகளுக்கிடையில் சிரிப்பை ஒளித்து வைக்கிறாள் எப்போது விடுவிப்பாள் என்று அவள் முகம் பார்த்த வண்ணம் நான்! அப்பன் என்னும் உறவெல்லாம் மறந்தே போச்சு நானும் மழலையாகிறேன் அவள் அருகிருக்கையில்!

அவள் உலகம்!

Image
என் உலகம் என் தோள் மேல் ஏறி தன் உலகம் பார்க்கிறது! உலகம் புரிபட்ட பின்னால்(ள்) உதறி நடக்குமோ உள்ளுக்குள் காயம் தருமோ நான் அறியேன்… சுற்றுலா வழிகாட்டி போல் அவள் வாழ்வின் வழிகாட்டி நான் அவ்வளவே! எனக்கே வாழ்வு புரிபடாத போது அவள் வாழ்விற்கு எப்படி காட்டுவேன் வழி? புரிபடாத ஒன்றை புாிந்தது போல் காட்டுவது தான் எத்தனை முரண்? தோளில் ஏற்றுவதோடு சரி அவள் வாழ்வை அவளே புரிந்து கொள்ளட்டும்! சொந்தப் புரிதல் காயப்படுத்தினாலும் உதடுகளுக்கு எப்போதும் புன்னகையை கற்றுத் தரும்!

சந்தோசம்!

Image
சந்தோசம் என்பது எங்கேயும் இல்லடா உனக்குள்ளே இருக்குது உனைப் பாத்துச் சிரிக்குது கை கூப்பி வணக்கம் சொல்லு!

போதையில் நதி!

Image
புதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்! போதையில் தள்ளாடியது நதி!

விட்டகலா நினைவுகள்!

Image
கவியரங்கம் ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை இது. ஒலி வடிவமும் அதன் கீழ் வாசிக்கும் வகையில் கவிதையையும் இணைக்கிறேன்.   தமிழ் வாழ்த்து தோற்றமறியோம் இவள் தொன்மை அறியோம் தோகை இள மயில் போல் இவள் காட்டும் அழகறியோம் மூத்த பெண்ணாம் எம் முகவரி இவளாம்! தாயே தமிழே வணங்குகிறேன் உனை இக்கவிக்கு உனைவிட்டால் வேறு யார் துணை! அறிமுகம் யார் இப்பயல் என நீவீர் கேட்டால் பதில் ஏதும் இல்லை என்னிடம்! அடியேனுக்கே அது தெரியாதபோது சபையோருக்கு எப்படி உரைப்பது? ஆனாலும் ஒரு குறிப்பு தமிழ் பழகும் மழலை போல எழுதுவேன் பல கவிதை இதுவென எழுந்தாடுவேன் ஆகா கவிதை இதுவென நீவீர் மெய்மறந்திருந்தால் மறு நிமிடம் கால் வாருவேன்! கடைசி வரை தமிழன் புத்தி அது வென்பதால் பிழை பொறுத்தருள்க என் கவிதைக்கு காது கொடுத்தருள்க! கேட்கக் கூடாத பலவற்றை கேட்ட காது தானே? கொஞ்சம் தமிழும் கேட்கட்டும் கொஞ்சும் தமிழும் கேட்கட்டும்...