அணையா(த்) தீ!
நீ எந்தன் வானம்    
நான் உந்தன் நீலம்    
ஏனிந்தக் கோலம்     
என் உயிரின் ஓலம் கேட்காதோ    
உந்தன் காதும்? 
கனவில் வருகிறாய்    
மலர்கள் சொரிகிறாய்    
எதிரில் மட்டும் ஏனோ     
என்னை எரிக்கிறாய்! 
நெஞ்சத்தில்    
உன்னை வைத்தேன்     
தீயென்று தெரியாது விட்டேன்     
அணைப்பது எவ்வாறு     
நீ வந்து அணைத்தாலும்     
அணையாது     
வளரும் தீ இது!
 
Comments
சரியாகச் சொன்னீங்க... இது அணைக்க கடினமான தீ தான்!
ரஞ்சித், தனபால் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.