மழலையாகிறேன்…!


அங்கும் இங்கும்
தவழ்கின்றாள்
ஆராய்ச்சி பல
புரிகின்றாள்!

எழுந்து நிற்க
முயல்கின்றாள்
விழுந்து பின்
அழுகின்றாள்!

ஆனாலும் மீண்டும்
முயன்று பார்க்கின்றாள்
விழ… விழ… எழுகின்ற
குழந்தையின் செய்கை கண்டு

நாமும் கற்க வேண்டிய
பாடம் இதுவென
உணர்கின்றேன்!

உதடுகளுக்கிடையில்
சிரிப்பை ஒளித்து வைக்கிறாள்
எப்போது விடுவிப்பாள் என்று
அவள் முகம் பார்த்த வண்ணம்
நான்!

அப்பன் என்னும் உறவெல்லாம்
மறந்தே போச்சு

நானும் மழலையாகிறேன்
அவள் அருகிருக்கையில்!

Comments

ஆகா... ரசித்தேன் பலமுறை...

வாழ்த்துக்கள்...
வாங்க தனபால்...

வாழ்த்திற்கு நன்றி!
அருமை ஐயா கவிதை மகள் தவளும் அழகில் தாங்களும் குழந்தை என ஆகிய உள்ளம் கண்டேன்!
தனிமரம் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை