அவள் உலகம்!
என் உலகம்
என் தோள் மேல் ஏறி
தன் உலகம் பார்க்கிறது!
உலகம் புரிபட்ட பின்னால்(ள்)
உதறி நடக்குமோ
உள்ளுக்குள் காயம் தருமோ
நான் அறியேன்…
சுற்றுலா வழிகாட்டி போல்
அவள் வாழ்வின் வழிகாட்டி நான்
அவ்வளவே!
எனக்கே வாழ்வு
புரிபடாத போது
அவள் வாழ்விற்கு எப்படி
காட்டுவேன் வழி?
புரிபடாத ஒன்றை
புாிந்தது போல்
காட்டுவது தான்
எத்தனை முரண்?
தோளில்
ஏற்றுவதோடு சரி
அவள் வாழ்வை
அவளே புரிந்து கொள்ளட்டும்!
சொந்தப் புரிதல்
காயப்படுத்தினாலும்
உதடுகளுக்கு எப்போதும்
புன்னகையை கற்றுத் தரும்!
Comments
வார்த்தைகளின் கோர்ப்பு மிக மிக அருமை...
என்னை மிக மிக கவர்ந்த கவிதை...
அற்புதம்... வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டிற்கு நன்றி. இந்தப் பாராட்டைப் பெற இந்த கவிதை தகுதியானதா என்று எனக்குத் தெரியல...
என்றாலும் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...!
உங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/blog-post_14.html
நன்றி...