யாழ் களக் கிறுக்கல்கள் - XV
கிறுக்கல் 45:
கதிரவனும் வைகறையில் உதயமாகும்
கண்ணீரின் வழித்தடங்கள் மறைந்துபோகும்!
நீளுகின்ற கதிரின் கைகள் பற்று
கவலைகள் போகுமே அற்று!
விரயமாகும் காலத்துளிகளை எண்ணு
உயரமாகும் உனது வாழ்க்கை கண்ணு!
எழுந்து நில்லு நீயும் கொஞ்சம்
விழுந்து கிடந்த புல்லும்
எழுந்து நிற்கும் கோலமது பாரு
துணிந்து செல்ல பாதை பல உண்டு
குனிந்து நீயும் நிற்பது ஏன் இங்கு?
கிறுக்கல் 46:
பலதாய் அடையாளம் கொண்டே
அது இதுவெனக்
கை காட்டுவார்
கடவுளை!
கல்லன்றி ஏதும் காணாது
எது வெனத் தேடுவார்
மூடரும்!
உள்நின்று சிரிப்பான்
கடவுள்
உனக்குள் நின்று சிரிப்பான்
கடவுள்
கட உள்
காணாத காட்சி காணலாம்
கண்டபின்
ஆனந்தக் கூத்தாடலாம்!
Comments
விழுந்து கிடந்த புல்லும்
எழுந்து நிற்கும் கோலமது பாரு
துணிந்து செல்ல பாதை பல உண்டு
குனிந்து நீயும் நிற்பது ஏன் இங்கு?
காலத்துக்கு ஏற்ற சொற்பிரயோகம் அருமை!....
வாழ்த்துக்கள்........
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... தொடர்ந்து வாருங்கள்...