அத்தை மகள்
ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : aththaiMakal.mp3 [1.36MB] அத்தை - உந்தன் முத்தான மகளை அவள் மேல் பித்தான எந்தனுக்கு சொத்தாக்கும் எண்ணம் உந்தன் சிந்தையில் இன்னும் வித்தாகவில்லையோ? தயிர் கடையும் மத்தாக - எந்தன் உயிர் கடைகின்றாள் அத்தை உந்தன் செல்வ மகள் முகமதை முழுநிலா என்று சொன்னால் பூரணமாகாது ஏனெனில் முழுநிலா என்றும் முழுசாய் குளிர் விட்டுச் சிரிக்காது! தளிர் கரம் கொண்டு பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும் பட படக்க மாட்டேன் அத்தை - அந்த பட்டு விரல்களின் பாஸையில் பல சங்கதி காண்பேன் அத்தை! கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை இராமன் முதல் அர்ச்சுனன் வரை கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும் யாரவரில் கறை கண்டார்? மேனி நிறம் பார்க்காதே அத்தை அன்பு நிறம் பார் திறம் திறம் என்று தித்திப்பாய்...! நாலெழுத்துப் படிக்கவில்லை என்று நகைக்காதே அத்தை ஊரோடு உலகறியும் நல்லறிவு எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு வேண்டும் அத்தை! கையில் இல்லை நாலு காசென்று கலங்காதே அத்தை - எந்தன் கனவுக்கு உலகை நெய்யும் வலி உண்டென்று அறிவாய் அத்தை! பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை நித்தம் ஆய்ந்து அறிந்...
Comments
பூக்கட்டும் புத்தாண்டு
புது மலர்கள் பூக்கட்டும்!
ஈழம் மலரட்டும்
இனமானம் பரவட்டும்!
தமிழ்ன் நான் என்ற
பெருமை உணரட்டும்!
தன்னால் முடியும்
நெஞ்சம் நிமிரட்டும்!
கொடுப்பதில் வரும்
மகிழ்வை உணர்ந்திடுவோம்!
உழைப்பதில் உண்மை
உயர்வை அடைந்திடுவோம்!
அன்பால் பேசியே அமுதாம்
தமிழ் வளர்ப்போம்!
பொங்கட்டும் பொங்கல்
புத்தாண்டு மலரட்டும்!