தீப ஒளி வாழ்த்துகள்...
காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும்.
அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா?
எதிர்பார்ப்புடன்... இக்கவிதை...
பாவம் படர்ந்த
வாழ்வது தொலைந்த
தீபாவளி!
தீண்டும் துன்பமெல்லாம்
சுட்டுப் பொசுங்கும் இனி!
திரைகடல் மீதில்
தீபம் விடுவோம் - அந்தத்
திங்களவனை
விருந்துக்கழைப்போம்!
வீணை தீண்ட
விரல்கள் என்போம்
விசைகள் தீண்டும்
விரலை அவிப்போம்!
பாசாங்கில்லாப்
பெண்ணை மதிப்போம்
பழகுவதற்கினிய
அன்பை வளர்ப்போம்
போருக்கு ஒரு
போர்வை கொடுப்போம்
வெள்ளைப் புறாவை
எங்கும் பறக்கவிடுவோம்...
______________________________________________
Photo Source : http://www.pixagogo.com/
Comments