வாழ்ந்தென்ன லாபம்?
வாழ்ந்தென்ன லாபம்
என்றெனக்குத் தெரியாது
தெரிந்ததெல்லாம்
நான் உரைப்பேன்
காது கொடுத்துக்
கேட்பாய்...
பூத்திருக்கும்
என் மனசில்
பூவொன்று வந்திருந்து
காது மடல்
வருடி
கன்னத்தில் கனி
முத்தம் கொடுத்து
தேகம் தொட்டணைத்தால்
கோடி இன்பம்
என்பேன்
வாழ்வதால்
வந்தவின்பம்
இதுவென்பேன்
தாலி கட்டி
என் சொந்தம்
என ஆன பின்
சில்லறைச்
சண்டைகளும்
சிணுங்கல்
பேச்சுக்களும்
கொத்தாக என்
முடி கோதும்
அவள் விரல்
தரும் இன்பமும்
வற்றாத வாஞ்சையோடு
வடிவழகி
எனக்குக் கொஞ்சம்
ஊட்டி
மிச்சம்
தானுண்ண
உருகிப் போகுமே
என்னுள்ளம்
இதற்கேது ஈடு?
திங்கள்
பத்தாக
திங்களே
என்னவள்
வயிற்றில்
வந்துதிக்க
சிறு நிலவை
பெரு நிலவு
ஈன்றெடுக்க
வண்டாகி
சுற்றியலைந்த நான்
தண்டாகி
சிறு நிலவை
என் கையோடணைக்க
குளிர் புன்னகை
செய்யுமே
என் முத்தாகி வந்த
சிறு பிஞ்சு
எத்துணை யின்பம்
இது...
சொல்லிக் கொண்டு
போக
இது போல்
பல கதை
விரியும்
என்னுள்ளத்தில்
காத்திருந்து
நீ கேட்பாயா?
Comments
காதலை பாடியதால்
கவிதை அழகானதா
கவிதைகள் பாடியதால்
காதல் அழகானதா?
'இரண்டுமே அழகுதான்...'
வாழ்துகளுடன்,
வேல்.சாரங்கன்.
www.vaanampaadi.blogspot.com
காதலை பாடியதால்
கவிதை அழகானதா
கவிதைகள் பாடியதால்
காதல் அழகானதா?
'இரண்டுமே அழகுதான்...'
வாழ்துகளுடன்,
வேல்.சாரங்கன்.
www.vaanampaadi.blogspot.com
ரசித்து கருத்திட்டதிற்கு நன்றி... நீண்ட இடைவெளிக்கு பிறகு நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்...