காதலர் தினத்தில் எழுதிய கவிதை...

பெண்ணென்று பிறந்து
கண் முன்னே
அங்கம் அங்காங்கே
காட்டி நடந்து
கொல்லாமல் கொல்கின்றார்
அம்மா
கொழும்பில்
எம் குலத் தமிழ்க்
கிளிகள்!


பிரான்ஸ்,
ஜேர்மன்,
சுவிஸ் என்று
பறந்து


கொட்டும்
பனியில் கொட்டாவி
விடக்கூட மறந்து
அண்ணனுடன்
அப்பா சேர்த்து
அனுப்பும் பணம்


கையில்லாச் சட்டை
வாங்கவும்
அங்கம் கொப்பளிக்கும்
ஆடை வாங்கவும்
உதட்டுக்குச்
சாயம் அடிக்கவும்
இன்னும் பலப்... பல...
செய்யவும்
வீணாகக்
கரைகின்றது.


இந்த 'மேக்கப்' பின்
பின்னால் உள்ள
உண்மை
உருவம் அறியாது


நீண்ட
'கியூ' வில் நிற்கின்றாரம்மா
பாவம் எம்
இளைஞர்!
சில நாள்
பின்தொடர
'சீ பாவம்' என
அவளும் புன்னகைக்க
பரிதாபத்தில்
தொடங்கியது
காதல்


பிறகென்ன
கையோடு கை
சேர்ந்து நடக்குமளவு
நெருக்கம் வந்தது.


பஸ்சில் ஏறினால்
அருகருகே
உரசி இருத்தல்
கிசு கிசுப்பாய்
காதல் வசனம்
இன்னும் சில
சொல்ல முடியாத
சங்கதிகள்


பாவம்
பக்கத்தில்
இருப்பவர்
கூச்சத்தில் நெளிவார்.


காதலுக்கு
கண்ணில்லை என்பது
சரிதான்!


கோல்பேஸ்
வந்ததும்
கையில் குடை
விரியும்
ஒதுக்குப் புறமாய்
அமர்ந்து
கொள்வார்கள்
என்ன செய்வார்களோ
யாம் அறியோம்!


அது
மட்டுமா?


திரையரங்கில்
நுழைந்து பாருங்கள்
வரிசையாய்
இளஞ்ஜோடிகள்!


மனம் படமா
பார்க்கும்?


எது காதல்
என்றறியாது
ஏதேதோ
செய்கின்றார்
ஐயகோ
மோகத்தில்
அவிகின்றார்.


கண்டதும்
கை அணைப்பது தான்
காதலா?


வாய் நிறைய
பொய் உரைப்பது தான்
காதலா?


கை நிறைய
காசு கேட்பது தான்
காதலா?


கட்டி அணைத்து
முத்தம் தருவது தான்
காதலா?


கறுப்பென்றும்
வெள்ளையென்றும்
நிறம் பார்த்து
வருவது தான்
காதலா?


எது காதல்?
இன்று நாம்
செய்வதெல்லாம்
உண்மைக்
காதலா?


சத்தியமாய் இல்லை
இன்றைய காதல்
காமத்தின்
கருக்கட்டல்!


பின்
எது தான்
காதல்?


அன்பெனும் கயிறு
திரித்து?
இரு இதயம் கட்டி
இணைத்து?
வெண்பனி போல
மெல்ல நெஞ்சம்
உருகி,
கடலென பரந்து
வருவதே காதல்!

Comments

வெளில் தெருவில் அங்காடிக்கு
போனால் அங்கெங்கே நின்று
செய்வதை விட்டு அறைகுரையாய்
போட்டதை பார்த்து சும்மா யொல்லு விட்டு
அலைந்தால் இப்படி தான் கவிதை வரும்
எனி போனால் அக்கம் பக்கம்
பார்க்காது பாதையை மட்டும் பார்
நல்ல காதல் கவிதை வரும்...........

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்