சகோதரிக்கு...

தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்...

சகோதரி,
யாரிவன் என்ற விசாரணைக்
கோதாவில் இறங்காமல்
தந்துவிடு உந்தன் சோகத்தின்
ஒரு சிறு துளி தன்னை!

அருமை அப்பா - உன்னை
அழவைத்துப் பார்த்தறியாதவர்!
இன்று கொடும் சோகப் பிணியில்
விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து
நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம்
யாரறிவார் உன்னையன்றி!
ஆனாலும் சகோதரி உந்தன் சோகம்
நானறிவேன்...

சோகத்தின் சுவடுகள் உன்னிடம்
மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள்
உள்ளார் சொந்தம் சொல்ல!
ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா
குழந்தை போல?
பாசப் பசையில் மறந்துவிடுவதா
உந்தன் வாழ்வை மெல்ல?

வேண்டாம் சகோதரி
செய்வோமே புது விதி!

பரிதாப வோட்டுக்கள் உந்தன்
மனவங்கிக்கு தேவையில்லை
உணராத மக்கள் கூட்டம்
உள்ளமட்டும் உன் போன்றவர்க்கு
விடிவில்லை!
அதற்காக நீ பிடிப்பது சாவின்
கரமில்லை!
விழித்துக் கொண்டு துள்ளியெழு
வேறு வழியில்லை!

தந்தை கண்ட கனவுகள்
உருப்பெறட்டும் உன்னால்
நடக்காதது எதுவுமில்லை பெண்ணால்
எழுந்துவா என் சகோதரி
எவர்காகவும் காலம் இல்லை நீ அறி!

Comments

நல்ல கவிதை.பாராட்டுக்கள்.
வெற்றி நன்றிகள்...
நல்ல கவிதை.நொந்த உள்ளத்திற்கு உற்சாக டானிக். வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை.நொந்த உள்ளத்திற்கு உற்சாக டானிக். வாழ்த்துக்கள்.
நன்றி சுப்ரமணியன்...

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்