இன்ப வதை...

எத்தனை அழகாய்
சிரித்துவிட்டுப் போகின்றாய்
நீ...
இங்கே ஒருவன் சிறைப்பட்டதை
அறியாமல்....!

உந்தன் நினைவுச்
சிலந்தியில் சிக்கிய
என்னைக் கொஞ்சம்
விடுவி...
இரவுகளோடு நான் படும்
அவஸ்தை போதும்!

சிரிப்பில் கூட
போதை இருப்பது
எனக்குத் தெரியாமல்
போய்விட்டது!

"களுக்" என நீ
சிரிக்கின்றபோது
மனசுக்குள் எங்கோ
உளுக்கிக் கொள்கிறது!

புன்னகை கூட
இத்தனை அற்புதமாய்
இருக்கும் என்று
நான் அறிந்ததில்லை

மயில்பீலியாற் மனதை
வருடுகின்ற
மகா சுகம்

"ரெடிமேட்" சிரிப்பை
உதடுகளில்
ஒட்டவைத்துக்
கொள்பவர்களும் உண்டு
அதற்கு ஒரு
சாமர்த்தியம் வேண்டும்

நீ,
எல்லாம் கடந்து
புன்னகையால்
உதடுகளில் புதுக்கவிதை
எழுதுபவள்!

உன்னைக் கண்டு தானடி
என் உதடுகளுக்குச்
சிரிக்கச் சொல்லிக்
கொடுக்கிறேன்

பெண்ணே,
போதும் நிற்பாட்டு
உன் உதடுகள்
குவிகின்றபோது
சிறுமொட்டு பூவாகி
"ருது"வாகும் மெல்லிய ஓசை
மனதுக்குள்
பூகம்ப அதிர்வுகளாக!

Comments

ம்ம்ம்ம்... அருமையான கவிதை. பல தடவைகள் படித்து இரசித்தேன்.

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்