அத்தை மகள்


ஒலி வடிவம் :

Your browser doesnot support to play
தரவிறக்கம் :
aththaiMakal.mp3 [1.36MB]

அத்தை - உந்தன்
முத்தான மகளை
அவள் மேல்
பித்தான எந்தனுக்கு
சொத்தாக்கும் எண்ணம்
உந்தன் சிந்தையில்
இன்னும் வித்தாகவில்லையோ?

தயிர் கடையும் மத்தாக - எந்தன்
உயிர் கடைகின்றாள் அத்தை
உந்தன் செல்வ மகள்

முகமதை முழுநிலா என்று
சொன்னால் பூரணமாகாது
ஏனெனில் முழுநிலா
என்றும் முழுசாய்
குளிர் விட்டுச் சிரிக்காது!

தளிர் கரம் கொண்டு
பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும்
பட படக்க மாட்டேன் அத்தை - அந்த
பட்டு விரல்களின் பாஸையில்
பல சங்கதி காண்பேன் அத்தை!

கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை
இராமன் முதல்
அர்ச்சுனன் வரை
கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும்
யாரவரில் கறை கண்டார்?
மேனி நிறம் பார்க்காதே அத்தை
அன்பு நிறம் பார்
திறம் திறம் என்று தித்திப்பாய்...!

நாலெழுத்துப் படிக்கவில்லை என்று
நகைக்காதே அத்தை
ஊரோடு உலகறியும் நல்லறிவு
எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு
வேண்டும் அத்தை!

கையில் இல்லை நாலு காசென்று
கலங்காதே அத்தை - எந்தன்
கனவுக்கு உலகை நெய்யும் வலி
உண்டென்று அறிவாய் அத்தை!

பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை
நித்தம் ஆய்ந்து அறிந்த அறிவிது அத்தை
சத்தம் செய்யாதே அத்தை - எந்தன்
சித்தம் கலங்கடித்த பச்சைப் பசுங்கிளியை
பக்கம் வரவிடு அத்தை
சொர்க்கத்தில் என்னை
துயிலவிடு அத்தை!

Comments

ஐய்யா கவி ரூபன், நீங்க பெரிய ஆளுதான் போங்க! தூள் கெளப்பிட்டீங்க. இனி கவலையே வேண்டாம் போங்க. அவங்க எல்லாம் உங்க பையிலதான்.

உங்கள் ஏக்கக் கவிதை சமயத்தில் ஒரு வகை சிரிப்பு வரவைக்கிறது.

ஒலி வடிவத்தில் தொனியில் ஏற்றமும் இரக்கமும் ஒருவகையான கூடுதல் மெருகளிக்கிறது.

அத்தை மகள் உங்களுக்கு கிடைக்காமலே இருக்கலாமோ எனவே தோன்றுகிறது. அப்போதுதானே மேலும் மேலும் இது போன்ற கவிதைகளை வழங்குவீர்! :-)

வாழ்த்துக்கள்.

பகிர்ந்தமைக்கு நன்றி கவி ரூபன்.
மாசிலா,

நன்றிகள்... நீங்க நினைச்சது மாதிரி கிடைக்கல தான்...

உங்கள் ரசனைக்கு நன்றிகள்... இந்த Blog ஐ இன்னும் எப்படி மெருகேற்றலாம் என்று நீங்கள் நினைப்பதை பகிர்ந்து கொண்டால் நன்று...

அது சரி உங்க பேர் எனக்கு ஒரு பழைய பாடலை நினைவு படுத்துது...

"மாசிலா உண்மைக் காதலி..." (அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வருகுது...)
மாசிலாமணி : மறைந்த என் தகப்பனார் எனக்கிட்ட பெயரப்பா. என்ன தவம் செய்தோனோ இவ்வளவு ஒரு அருமையான தமிழ்ப்பெயரை அடைவதற்கு. அந்த ஐயாவுக்குத்தான் நன்றி சொல்லனும்.

அதனாலென்ன? நெருப்பு என்று சொன்னால் சுட்டுவிடவா போகிறது. உங்களது இரசனையை மதிக்கிறேன்.

மற்றபடி உங்கள் தளம் நன்றாகவே இருக்கிறது. இந்த விடயத்தில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு பெரிதாக எதுவும் கிடையாது நண்பரே.

Popular posts from this blog

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்