அன்னைக்கு ஒரு ஆறுதல்!
கார்த்திகை 27, 2014 அன்று படித்த கவிதை. வணக்கம் அன்னை தமிழுக்கு வணக்கம் தாய் மண்ணிற்கு வணக்கம் தலைவன் தாளிற்கு வணக்கம் மற வீரா் கல்லறைக்கு வணக்கம் அநாதையாகி நிற்கும் பெண்ணே… ஆதியிலே இருந்தவரெல்லாம் பாதியிலே போவார் என்று யாரேனும் சொன்னதுண்டா? வீதியிலே நிற்கின்றாயே அம்மா… விதி வந்து நின்றால் கலங்க மாட்டோம் சதி செய்து வாசலில் நின்ற பகை முற்றத்தில் பாய்ததே அம்மா…! கக்கத்தில் இருந்த பிள்ளையும் கருவிலே உருவான மகவும் சொர்க்கத்தில் கட்டாய இடம் தேடிக் கொண்டன! கற்றைக் கூந்தலது வாரி பல வண்ணப் பூக்கள் அதில் சூடி நெற்றித் திலகமது ஒளிர மங்களமாய் நின்ற பெண்ணே… சொந்தங்களை நீ இழந்தாய் மடி நிறையக் கொண்ட செல்வமதுவும் இழந்தாய் துடிப்பாய் நின்று உன் மானம் காத்த மறவரையும் இழந்தாய் தூய தமிழ்ப் பேச்சினை இழந்தாய்! துட்டர்களின் “பூட்ஸ்” கால்களின் அடியில் மிதிபட்டுக் கிடக்கின்றாயே அம்மா… உன் கண்ணின் ஈரம் எப்படித் துடைப்போம்? உன் நெஞ்சின் பாரம் எப்படிச் சுமப்போம்! ஈழத் தாயே உன்னிடம் பெற்...