யாழ் களக் கிறுக்கல்கள் - XI
கிறுக்கல் 35: யாவும் என்றோ முடியும் ஆகும் அத்தனையும் அழியும் என்ற விதியின் படி யாவும் என்றோ முடியும்! நீயும் நானும் நொடியில் மயான மடியில்! சாவின் மடியில் சண்டியனும் போவான் நொடியில்! தாயின் பாலில் உடம்பில் ஓடும் இரத்தம் நோயில் விழுந்து பாயில் படுத்த பின்னர் ஓடி அடங்கும்! வாழும் நாளில் சூழும் சோகம் வாடி வதங்கிச் சோரும் நெஞ்சம்! ஆழும் கடவுள் அருள் ஒன்று தரவேண்டும் நாளும் பொழுதும் சோகச் சுவடறுத்து சிந்தனைச் சுடர் வளர்த்து தூய அன்பில் உயிரத்தனையும் மூழ்கி தேட வேண்டும் பெரும் வாழ்வு தரும் ஜோதி! ----------------- கிறுக்கல் 36: மனதில் ஆசையோடு எனக்கொரு ஆணைபோடு மடியில் வந்து விழுந்து மங்கை உன்னை வீணையென மீட்டுவேன்! நாளை என்று இன்னொரு நாள் தேவையில்லை ஆளையாள் அணைத்துக் கொள்ள ஐயர் வந்து நேரம் பார்க்கத் தேவையில்லை! காலை விடியும் பொழுதில் கற்கண்டு நினைப்பில் உன் முகத்தை வெட்கம் மெழுகும் நல்ல சமயமென்றுணர்ந்து என் கை ...