ஏய் பகையே... அடாது செய்தாய்!

காலை வந்தது
காபி வந்தது
நா இனிக்கவில்லை!

சேதி கேட்டதும்
உள்ளம் உடைந்தது
யாருக்கும் புரியவில்லை!

ஆதி முதல் தலைவன் கூட
இருந்த ஒருவன்
பாதி வழியில் போவான்
என்று யார் அறிவான்?

பாவி ஒருவன்
செய்த செயல்
ஆவி துடிக்க வைத்ததம்மா!

சிரிக்கின்ற ஒரு புலி
எரிகின்ற தீயில்
வேகுதம்மா!
தெரிகின்ற ஈழத்துவாசல்
பார்க்குமுன்
விரிகின்ற சிரிப்படக்கி
பறந்தாயே செல்வா...!

முதலில் ஒரு சிங்கம் போனது
இப்போது ஒரு புலியும் போகுது
வலியும் வஞ்சகமும்
எம் ஈழப்பாதை எங்கும்
விரிந்தே கிடக்குது!
தமிழ்ச் செல்வா...
வலிக்குது நெஞ்சம்...
கோபத்தின் கொந்தளிப்பில்
எரியுது உள்ளம்...

ஏய்! பகையே
அடாது செய்தாய்
விடாது எம்
வீரர் பகை!

இன்னொரு பெரும்
தோல்விக்காக
காத்திரு!

-------------
03-11-2007 (படம் உபயம் : pathivu.com. நன்றி)

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

குழந்தை பிறந்த போது…

கோடுகள்