பிரிய சிநேகிதி...!
பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலும் சிநேகிதி என் அன்புக் கூட்டுக்குள் நீ இன்னும் சிட்டுக் குருவிதான்! நீ அதிலிருப்பதும் தூரப் பறப்பதும் உன் சிறகுகளிடம்... வாழ்க்கைப் பாதையில் முகம் மறக்கலாம் முகவரி மறக்கலாம் என் அன்பு தடவிய வார்த்தைகளை நினைத்துப் பார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேற்றைய பொழுதெதற்கு என்று சாட்டையால் அடிக்காதே... கடந்த காலங்களின் கனவுகள் முக்கியம்! என் வார்த்தைகளில் சில சமயம் வாள்கள் கட்டியிருப்பேன் உன்னைக் காயப்படுத்தவல்ல... கடைசி வரை என்னை ஞாபகப்படுத்த... பிரிய சி...