சிவன் வந்தான்

சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்....

சிவன் வந்தான்
சிவனோடு அவன் மகன்
குகனும் வந்தான்
மூத்தவன் கணபதியும்
அன்னை பார்வதியும்
பிறிதொரு நாள்
வருவதாக
சேதியும் வந்தது!

"என்ன திடீர்
விஜயம்...?"
என்றேன்

"நாட்டில்
சமாதானமாமே...
அது தான்
சும்மா சுற்றிப்
பார்க்க வந்தோம்"
என்றான் குகன்
மயலிறகால்
காது குடைந்த வண்ணம்...

"கழுத்தில்
நஞ்சு கட்டியவர்கள்
சுதந்திரமாக
நடமாடலாமாமே...
அதுதான் நானும்
வந்தேன்" என்றான்
நீலக் கழுத்தை
தடவிய வண்ணம்
சிவன்...!

பாம்பு பல்லிளித்தது
மயில் தோகைவிரித்து
அழகு காட்டியது

"நல்லது தான்
சமாதானம்..."
வாய்
முணுமுணுத்தது!

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=21122

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை