Posts

Showing posts from March, 2007

பிரிய சிநேகிதி...!

பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலும் சிநேகிதி என் அன்புக் கூட்டுக்குள் நீ இன்னும் சிட்டுக் குருவிதான்! நீ அதிலிருப்பதும் தூரப் பறப்பதும் உன் சிறகுகளிடம்... வாழ்க்கைப் பாதையில் முகம் மறக்கலாம் முகவரி மறக்கலாம் என் அன்பு தடவிய வார்த்தைகளை நினைத்துப் பார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேற்றைய பொழுதெதற்கு என்று சாட்டையால் அடிக்காதே... கடந்த காலங்களின் கனவுகள் முக்கியம்! என் வார்த்தைகளில் சில சமயம் வாள்கள் கட்டியிருப்பேன் உன்னைக் காயப்படுத்தவல்ல... கடைசி வரை என்னை ஞாபகப்படுத்த... பிரிய சி

பாவம் காற்று...!

----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது.... 'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20970

சிவன் வந்தான்

சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.... சிவன் வந்தான் சிவனோடு அவன் மகன் குகனும் வந்தான் மூத்தவன் கணபதியும் அன்னை பார்வதியும் பிறிதொரு நாள் வருவதாக சேதியும் வந்தது! "என்ன திடீர் விஜயம்...?" என்றேன் "நாட்டில் சமாதானமாமே... அது தான் சும்மா சுற்றிப் பார்க்க வந்தோம்" என்றான் குகன் மயலிறகால் காது குடைந்த வண்ணம்... "கழுத்தில் நஞ்சு கட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடலாமாமே... அதுதான் நானும் வந்தேன்" என்றான் நீலக் கழுத்தை தடவிய வண்ணம் சிவன்...! பாம்பு பல்லிளித்தது மயில் தோகைவிரித்து அழகு காட்டியது "நல்லது தான் சமாதானம்..." வாய் முணுமுணுத்தது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=21122

நான் அரசியல்வாதி!

எனக்குள் ஒரு ஆசை உண்டு எவர் விரலும் எழுதாத கவிதனை எழுதிடும் தமிழ் பாஷை உண்டு என் முன்னே தெரிகின்ற என் மண்ணின் விதிதனை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு எம் மைந்தர் எம்முன்னே விண் மைந்தர் ஆகும் நிலை கண்டும் உயிர் கொடுக்கும் பிரமாக்கள் நாமில்லையெனச் செப்பும் சிறப்பான தொனியுண்டு! தமிழன் விதி எழுதும் பேனாவின் சில மைத்துளிகள் நாமென்னும் உண்மை பல காலமாய் மறந்ததுண்டு "நமக்கு நம்மக்கள் தான் முக்கியம்" இலட்சியப் பேனாவின் வியர்வைத் துளிகள் இப்படிப் செப்பியபோது நாமவர்களுக்கு சூட்டிய பட்டம் "பைத்தியம்" "நம்மக்கள் கஷ்டப்படுகிறார்கள்" இப்படி யாரும் சொன்னால் நான் சிரிப்பதுண்டு - ஏனெனில் அம்மக்களில் ஒருவனான நான் சுற்றம் சூழ சிறப்பாய் வாழ்வதை அவர்கள் மறந்தது கண்டு நாம் எம் கை கொண்டு மக்களை அணைப்பதில்லை... அறிக்'கை' எனும் கை கொண்டு நாமிருப்பதை மக்களுக்கு நினைவு படுத்திக்கொள்வோம் எம் மனதில் எம்மக்கள் நினைவு என்றும் எழுவதில்லை எம் நினைவே மனதில் இருப்பதால் கனவிலும் எம்மக்கள் நினைவு வருவதில்லை எம்மக்கள் நினைவு வருவது தேர்தலில் மட்டும் தான் -

சாவுக்கு ஒரு தூது!

சாவே சட்டென வந்தென்னை அணைத்துக் கொள் சகதி வாழ்க்கையில் தொலைந்திட விருப்பமில்லை மொட்டுக்களே உங்கள் குவிந்த உதடுகளை விரித்துப் புன்னகையுங்கள் பூப்பெய்திய பெண்களைப் பார்த்ததில்லையா? துடுப்பென இருசிறகு கக்கத்தில் கட்டிய பறவைகாள்! ஆகாய வீதியில் ஒன்று கூடுங்கள் மரணத்தின் முன்னால் ஒரு மகிழ்ச்சிக் கீதம் கேட்க வேண்டும் ஆங்காங்கே நரைத்த முடிகளை காட்டாது ஓடி மறையும் மேகங்களே... கறுப்புச் சாயம் பூசிக் கொள்ளுங்கள் மண்ணின் மார்புச் சேலை நனைக்க மழைவேண்டாமோ? அருமை நண்பர்களே அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! உங்களில் ஒருவன் பிரியப் போகின்றான்! கனவுப் பயிர் வளர்த்தவன் காற்றினில் மெல்லக் கரையப் போகின்றான்! கற்பனைத் தேரேறி உலகை அளந்தவன் உருவழியப் போகின்றான்! சிரிப்பில் சிலந்தி வலை பின்னும் மங்கையரின் மாயம் இனிச் செல்லாது எந்தன் உயிர் இனி நில்லாது! அதோ யமதூதன்... 'வா' வென்று அழைக்கின்றான் உயிர்... மெல்ல... மெல்ல... உடம்புச் சட்டை கழட்டுகிறது! ம்... இப்போது தான் சுகமாய் இருக்கிறது! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20769

நவ நங்கை!

கையில்லாச் சட்டை! தணிக்கையில்லாத் தொடை! சாயச் சிவப்பில் சமாதியாகிப் போன உதடுகள்! புருவ மேட்டில் கருமேகக் குவியல்! இரவு உடையில் வீதி உலா! தேரொன்று நடப்பதாய் எம்மவர் கண்கள் இமையா(து) தவம் இயற்றும்! தடுக்கி விழும் இதயம் எடுக்கி அணைத்தால்(ள்) சொர்க்கத்தில் பயணம்! இளமை வெட்டி ஒட்டிய 'லேபிள்கள்' உற்றுப் பார்த்தால் எல்லாம் போலிகள்! உதடு பிரிந்தால் வார்த்தைகளுக்கு வலிப்பு எடுக்கும்! ஆங்கிலம் நிர்வாணம் ஆகும்! மூலையில் தமிழ் முக்காட்டுடன் மெல்ல விசும்பும்! பார்வை வண்டுகள் சிறகடிக்கும் ரோஜாவென யோசித்து மயங்கும்! குதிக்கால் உபயத்தில் உயர்ந்து விடுவார்கள்! குதிரை ஓடுவதாய் ஏமாந்து போவோம் அங்க ஆராய்ச்சி செய்ய எம்மவர்க்கு வசதியாய் கண்ணாடி உடை! விழியோடு அசையும் காமன் படை! நீள்முடிக்கு தேய் பிறை போலும்! நிமிர்ந்த பார்வைக்கு பஷ்பமாவதே எம்கதை காணும்! நாகரீகம் மீண்டும் பிறந்த இடத்தை நோக்கி! ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20415

மலர் வனம் வாடியதேன்?

(முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... ) கண்மணிகள் சோலை மீது வான் பறவை பறந்தது! வடிவான வளர் இளம்பிறைகளை வாடி வதங்கச் செய்தது! தலைவன் அடி தாங்காது ஓடி மறையும் கோளைகாள்... பேடித் தனம் செய்தனீர்! - உம் கோர முகம் காட்டினீர்! கொலர் உயர்த்திக் கொக்கரிக்காதீர்... மலர்களைப் பறித்த உங்களுக்கு மரணப் படுக்கை ரெடி! 'கலர்' கனவு ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளும்! உம் 'உயிர்'ப்பறவை பறக்குமடா சீக்கிரம்! அழுது வடிவதால் ஏதும் ஆகாது தோழரே! சர்வதேச அரச மேடைகளில் குருத்துகளில் குருதி பூசியவன் முக மூடி கிழிப்போம் மூச்சுத் திணறத் திணறக் கிழிப்போம்! இப்படி ஏதேனும் நடந்தவுடன் சோகமாய் கூடிக் கதைத்து அழுவதாக பாசாங்கும் செய்து வழமைக்குத் திரும்புவதே எம்மினச் சாபம்! காயம் பட்டவுடன் கத்துவதல்ல முக்கியம்! எமக்குள்ளேயே புலம்பித் திரிவதால் ஆவதொன்றுமில்லை! உலகின் பார்வையில் கொணர்ந்து உண்மை நிலை உரைப்பதே நலம்! தோழர்களே உள்ளத்தில் நெருப்பே

எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!

முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... திரளான மேனியதும் தளர்வாகிப் போனதுவே! துரும்பாகி, நூலாகி, உலையிடை கொதிக்கும் மெழுகாக ஆகி இப்போது நான்... என்னாகிப் போனேன்... பெண்ணாகி நீ வந்த பாவத்தால் என்நிலை இதுவாகிப் போனதுவே! கள்ளுக் குடங்கள் என இரண்டழகு காட்டிய போதையால் வந்த அழிவு இது பேதை என்று நின்னையே எண்ணி பாதை தவறிய பாவத்தின் பரிசு இது! எச்சில் வழி கடத்தினாய் எச்.ஐ.வீ யை வேடிக்கைக் காரி... இல்லை இல்லை

காணவில்லை!

காணவில்லை இடை(யை)! இடை, எதுவென்று அறியாதவர்கள் சிவன், 'கை' தாங்கும் உடுக்'கை'ப் பார்க்கவும் சிவன் யாரென்று சிந்திக்க முடியாதவர்கள் கவிஞர்களுடன் கலந்தாலோசியுங்கள் அவர்கள், "அது கற்பனையில் காணும் விஷயம்" எனக் கதையளந்தால் நல்லது... மறந்துவிடுங்கள் இல்லாத ஒன்றை ஏன் தேடுவான்? ___________ யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20164

யன்னல் நிலா

யன்னல் ஓரம் மின்னல் எழுதும் வண்ண ஓவியம் கண்களிரண்டும் காளை என்னை அழைத்துப் படிக்கும் காவியம்! செம்மண் நிறத்தை கண்முன் நிறுத்தும் கன்னத் தாமரை! இதழ்கள் வடிக்கும் தேனைக் குடிக்கும் கருவண்டு ஒன்று அங்கே மோட்சங் கண்டு மச்சமானதே! செவ்விளநீரென்ன இரண்டு தனங்கள் செதுக்கி வைத்த சித்திரம்! இதழ் சிவந்த ரோஜாவென்று முள்ளிருக்கும் கள்ளியை முகர்ந்து பார்த்த முட்டாளம்மா! மிரளும் விளியில் மானை யொத்த பெண்ணவள், உலவும் உயிரை உறவு அறுக்க வைத்தாளே கலவும் வேளை காமத் தீயில் அவித்தவள் நிலவும் நின்று ரசிக்கும் வண்ணம் காதல் ரசம் செய்தவள் உலகும் அழியும் என்றாலும் எந்தன் உண்மைக் காதல் அழியாது என்றே கூறம்மா!

முகங்கள்

எனக்கே என்முகம் அடிக்கடி மறந்து போகிறது! கண்ணாடி கூட துலக்கமின்றி துக்கம் அனுஷ்டிக்கின்றது வயல் வரம்பில், ஏர்தடங்களில் வடலி முளைத்த பிட்டிகளில் என்று எங்கேயோ என் முகம் தொலைந்து போயிருக்கலாம் தேடி எடுத்து என் முகம் இதுவென அடையாளம் சொல்வதும் கஷ்டந்தான்! எத்தனை... எத்தனை... முகங்கள் அதில் என் முகம் எது? 'பூட்ஸ்' கால்களின் அடியில் புண்பட்டுத் துடிக்கின்ற முகங்கள்! 'ட்ரக்' வண்டிச் சில்லின் அடியில் சிக்கிச் சிதலமடைந்து போன முகங்கள்! இப்படிப் பல பல விதங்களில்... கண்களில் ஏக்கத்தை தாங்கி தூக்கத்தை தேடும் ஒரு முகம்! கண்ணீர் போடும் திரையோடு கால தேவனை நிந்திக்கும் ஒரு முகம்! கடைசியில் போவது கல்லறை தான் ஆனாலும் கட்டாய லீவில் அனுப்ப யாரிவர் என மனுப் போடும் ஒரு முகம்! கட்டிய சேலையை உருவும் துச்சாதன வாரிசுகள்! 'துடிக்காத மீசைகள்' போலியாய் பொய்க் கோபம் காட்டும்! கற்பென்ன கற்கண்டா கண்டவர் எடுத்துக் கொள்ள? நறுக்கென்று நாலு வார்த்தை எடுத்துச் சொன்னால் என்ன? எங்கள் முகங்களின் முகவரிகளை முடிந்தவரை படித்துப் பாருங்கள் புதிதாய் ஒரு பாரதம் செய்யலாம்! ஒருவருக்கு இத்தனை மு

சீர்திருத்தங்கள்!

சீர்திருத்தம்! சீர்திருத்தம்! கல்வியில் சீர்திருத்தம்! கலைக் கூடத்தில் சீர்திருத்தம்! அரசியலில் சீர்திருத்தம்! பொருளாதாரத்தில் சீர்திருத்தம்! நடைபாதையில் சீர்திருத்தம்! சீர்திருத்தம் பல புரிந்தனரடி கிளியே! எவர் சிந்தையில் சீர்திருத்தம் புரிந்தார்?

அழகிய இளவரசி

Image
கண்களைப் பறிக்கும் அழகு உலகை கட்டிப் போட்டதில் ஒன்றும் வியப்பில்லை. கமராக் கண்கள் தவம் கிடந்தன.உலகில் பல தடவை படமெடுக்கப்பட்ட ஒரே பெண்மணி! உலகைக் கட்டிப் போட்ட அந்த அழகு உடலை விட்டுப் பறந்த போது யார் தான் அழவில்லை? நான் அழுதேன்...!அழுதபடி கிறுக்கியது... பியோனோ வாசிக்கும் விரல்களில் கூட ஒரு புது இசை பிறந்து வந்தது - அது டயனாவின் ஆத்மாவை ஆராதிக்கும் ஆலாபனை என சொல்லாமல் புரிந்தது கஜானா பல வேண்டி நின்றன - இந்த அழகுக் கஜானா தனை அள்ளத் துடித்தன மயான மடிதனில் பெருங் கஜானா மடிதனில் தவழ்ந்தவள் அமைதியாக உறங்குகிறாள் எங்களை உறங்கவிடாமல் விழிக்க வைத்து விட்டு!

இவள் எப்படி?

பார்த்தேன் கனைத்தாள் சிரித்தேன் விளி எனும் கருவி சுழற்றிச் சுட்டெரித்தாள் கதைத்தேன் வலையதில் துடிக்கும் மீனானாள்! ஆசைகளை தொடுத்தேன் கன்னம் கிள்ளியே முத்தமிட்டாள்! ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : ivalEppadi.mp3 [128kb]

அத்தை மகள்

Image
ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : aththaiMakal.mp3 [1.36MB] அத்தை - உந்தன் முத்தான மகளை அவள் மேல் பித்தான எந்தனுக்கு சொத்தாக்கும் எண்ணம் உந்தன் சிந்தையில் இன்னும் வித்தாகவில்லையோ? தயிர் கடையும் மத்தாக - எந்தன் உயிர் கடைகின்றாள் அத்தை உந்தன் செல்வ மகள் முகமதை முழுநிலா என்று சொன்னால் பூரணமாகாது ஏனெனில் முழுநிலா என்றும் முழுசாய் குளிர் விட்டுச் சிரிக்காது! தளிர் கரம் கொண்டு பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும் பட படக்க மாட்டேன் அத்தை - அந்த பட்டு விரல்களின் பாஸையில் பல சங்கதி காண்பேன் அத்தை! கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை இராமன் முதல் அர்ச்சுனன் வரை கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும் யாரவரில் கறை கண்டார்? மேனி நிறம் பார்க்காதே அத்தை அன்பு நிறம் பார் திறம் திறம் என்று தித்திப்பாய்...! நாலெழுத்துப் படிக்கவில்லை என்று நகைக்காதே அத்தை ஊரோடு உலகறியும் நல்லறிவு எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு வேண்டும் அத்தை! கையில் இல்லை நாலு காசென்று கலங்காதே அத்தை - எந்தன் கனவுக்கு உலகை நெய்யும் வலி உண்டென்று அறிவாய் அத்தை! பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை நித்தம் ஆய்ந்து அறிந்