Posts

யாழ் களக் கிறுக்கல்கள் - XV

கிறுக்கல் 45: கதிரவனும் வைகறையில் உதயமாகும் கண்ணீரின் வழித்தடங்கள் மறைந்துபோகும்! நீளுகின்ற கதிரின் கைகள் பற்று கவலைகள் போகுமே அற்று! விரயமாகும் காலத்துளிகளை எண்ணு உயரமாகும் உனது வாழ்க்கை கண்ணு! எழுந்து நில்லு நீயும் கொஞ்சம் விழுந்து கிடந்த புல்லும் எழுந்து நிற்கும் கோலமது பாரு துணிந்து செல்ல பாதை பல உண்டு குனிந்து நீயும் நிற்பது ஏன் இங்கு?   கிறுக்கல் 46: பலதாய் அடையாளம் கொண்டே அது இதுவெனக் கை காட்டுவார் கடவுளை! கல்லன்றி ஏதும் காணாது எது வெனத் தேடுவார் மூடரும்! உள்நின்று சிரிப்பான் கடவுள் உனக்குள் நின்று சிரிப்பான் கடவுள் கட உள் காணாத காட்சி காணலாம் கண்டபின் ஆனந்தக் கூத்தாடலாம்!

கசங்கிய காகிதங்களோடு…! - VII

திருவிழா இது தோ்தல் திருவழா! சாமிகளுக்குப் பதில் ஆசாமிகள் ஆங்காங்கே தோன்றி தரிசனம் தந்தனா் வாக்குக் கேட்டு வாக்கிங் வந்தனா்! ************************** சேவல் பாடியது திருப்பள்ளியெழுச்சி! சூரியன் சோம்பல் முறித்தான் மேகப் போர்வையை விலத்தி! பூவிதழ் வருடி தென்றல் புன்னகை செய்தது! சில இலைகள் முகம் வோ்த்து முணுமுணுத்தன! தலை துவட்ட துணி கேட்டு கை அசைத்தன! ************************** நீல வானம் நிறையச் சன்னம்! துவக்கு கக்கிய இரத்தம்! காளமேகம் காணவேண்டும் "இம்" என்றால் எழு நூறும் "அம்" என்றால் ஆயிரமும் தாண்டி, "டும்" என்றால் இன்னும் பல நூறு பாடலாம்!

கசங்கிய காகிதங்களோடு…! - VI

நாளை நாளை என்று மனிதன் சொல்வதுண்டு பாவம் பாவம் என்று கடவுள் நினைப்பதுண்டு வருகின்ற காலங்கள் தருகின்ற இன்னல்கள் அறிந்துள்ள மனிதா்கள் இருந்தால் சொல்லுங்கள்! ************************** கண்ணே… உன் வாயுதிர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் ஆராய்ச்சிப் பொருள்! காதலின் முன் ஒரு பொருள் தந்த அதே வார்த்தை  கலியாணத்தின் பின் வேறொரு அா்த்தத்தோடு… மனசை உணா்வை அன்பை மொழிபெயா்க்கும் முயற்சி வார்த்தைகள்! ஒன்று தெரிந்து கொள் உச்சரிக்கப்படுகின்ற உதடுகளைப் பொறுத்தே வார்த்தைகள் அா்த்தப்படும்!

கசங்கிய காகிதங்களோடு…! - V

எங்கே போகின்றீா் என்றால் எரிந்து விழுகின்றீா் போகவிட்டுப் பின் கேட்பது அபசகுனம் என்று அழுது மாய்க்கின்றீா் பஸ்வண்டி ஏறும் வேளை கண்டக்டா் போகுமிடம் கேட்பானே! அவனிடம் ஆகுமா உந்தன் கூச்சல்? சும்மா பழசுகள் பாடி வைத்ததை அம்மான் நாமும் ஏன் தொடா்ந்து சொல்வான்? பெம்மான் சிவன் இருக்கிறான் – எம் தலைவிதி நன்றாய் அறிந்தவன்! வாய்ச் சொல்லுக்கு வாள் ஏந்தும் சக்தி இருக்கலாம் அன்பான விசாரிப்பெல்லாம் வினையாகுமோ அம்மான்? பல்லி சொல்லும் பலன் பார்த்ததெல்லாம் பாட்டி காலம் – அதை மனக்கூட்டை விட்டே ஓட்டி விடுவது உண்மை ஞானம்!

யாழ் களக் கிறுக்கல்கள் - XIV

கிறுக்கல் 43: என்ன நடந்தது என்றெனக்குத் தெரியாது முன்னம் போல் முறுவல் இல்லை முகத்தில்! கன்னம் சிவந்து காத தூரம் ஓடி மறையும் காதல் இல்லை நெஞ்சில்! இன்னும் இளகிய உன் சிந்தை காணவில்லை முன்னும் பின்னும் அற்புதங்கள் காட்டும் அழகவை போனதெங்கே பிள்ளை? விளங்காத கவி சொல்லும் விரிகின்ற கண்களின் ஒளி மறைந்ததும் என்ன? பல நூறு துச்சாதனர்கள் கூடி மான பங்கம் செய்தது போல அழகிழந்ததும் என்ன? "ஈழம்" எனும் பேர் தாங்கி நின்ற பெண்ணே எப்போது துடைப்போம் உன் துயர்?   கிறுக்கல் 44: வலிகள் மனதில் கவலை எழுதும் வரிகள்! மொழிகள் பலவிருந்தும் என்ன பயன்? உன்கண்ணடி பட்டு கண்ணாடி போல் உடைந்த உள்ளத்தின் வலி சொல்ல எந்த வார்த்தையும் அகப்படவில்லை! என்னடி எனக்குள் செய்தாய்? ஓரடிக் கவிதையில் ஔிந்திருக்கும் அத்தனை அதிசயமும் உன் ஓரங்குலப் புன்னகையில்! ஈரடி இடைவெளி இன்னும் எமக்குள் ஏன்? தே...

யாழ் களக் கிறுக்கல்கள் - XIII

கிறுக்கல் 41: இறைவா மறைவா(ய்) இருக்கும் தலைவா ஒளியோ இருளோ உன் நிறம் எதுவோ தெரியேன் பழியோ பாவமோ நீ போட்ட பாதையில் எவை எவை வருமோ அறியேன் நடக்கின்றேன் தனியே தந்தை விரல் பற்றி நடக்கும் சிறுவன் போல் உன் விரல் தேடி அலைகின்றேன் பற்றுவேன் ஒருநாள் பற்றிய பற்றுக்கள் பட படவென அறவே!   கிறுக்கல் 42: கூட வரும் கூட்டம் கூடை நிறைப் பூக்கள் கொண்டு வரும்! கூடு விட்டுப் போன பின்னால் 'பிணம்' எனும் பெயரும் வரும்! ஏடு எடுத்துப் படித்தும் என்ன ஓடி ஓடி உழைத்தும் என்ன மாடி வீட்டு மைனரானாலும் என்ன கூடு கழட்டி உயிரார் பறந்த பின் சூடு வாங்கி எரிந்து போகும் தேகம் - ஒரு பிடிச் சாம்பலாகிப் போகும் பாவம்! நிலையாமை தெரிந்தும் ஏனிந்த அறியாமை நான் இன்று போனால் நீ நாளை வருவாய்! நீயும் நானும் பூமியின் விருந்தினர் அனுமதி நீட்டிப்பு என்ற கதையே இங்கில்லை..! அனுமதி இருக்கும் வரை அனுபவி 'சக மனிதன்' என்கின்ற அறிவு கடந...

2010 இல்…

இன்னொரு ஆண்டின் இனிய பிறப்பு வேண்டுவது என்னவென்று அறியாது உள்ளுக்குள் தவிப்பு! ஆள ஒரு நாடு வரும் என கண்டு வந்த கனவு மீள முடியாச் சோகத்தோடு கலைந்து போனதென்ன நீ வினவு! எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளே பல நூறு ஒவ்வொன்றாய் நீ வந்தே பதில் கூறு! விரிகின்ற பாதைகள் தெரிகின்ற காட்சிகள் சரிகின்ற உண்மைகள் காலகாலமாய் நாமெல்லாம் ஊமைகள்! பிறக்கின்றாய் நீயென்று துதிக்கின்றோம் நாமின்று சிரிக்கின்ற உன் இதழ் கண்டு பறக்கின்றது நம்பிக்கை வண்டு! ஆண்டெனும் அழகு நங்கையே அமைதி தருவாய் - எம் முன்னெழும் இடா் எல்லாம் களைந்தே விடுவாய்!