Posts

எழுந்து வாருங்கள்...!

Image
எழுந்து வாருங்கள் இனியும் ஒதுங்கி நிற்கும் சாபம் வேண்டாம் எழுந்து வாருங்கள்! சந்து, பொந்து எங்கிருந்தாலும் வாண்டு, பெண்டு அனைவரும் சேர்ந்து முந்தி வாருங்கள் முழு மனசாய் வாருங்கள்! அந்திவானச் சிவப்பை அள்ளி விழிகளில் பூசுங்கள்... ஆதவன் வெப்பம் அள்ளி நாக்கினில் தடவுங்கள்... அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமெனில் மனசும் மாறும் எனும் மந்திரம் பழகுங்கள்! தலை ஆறு போல் நீவீர் திரண்டு வந்தால் வரலாறு இதனைப் பதிவு செய்யும் வற்றாத வெள்ளம் போல் எங்கு போய் உற்றாலும் வற்றாத ஈழ வேட்கை கண்டு உலகோரும் புரிந்து கொள்வர் உதவிட முன்வருவர்! முற்றாக எம்மினத்தை அழிக்கின்ற முட்டாள்கள் நட்டாற்றில் நிற்கவேணும் நமக்கொரு நீதி கிடைக்க வேணும்! நாற்றிசையும் அதிரட்டும் நாளிழிதழ்கள் எழுதட்டும் நாளை எமக்கெனும் வேளை பிறக்கட்டும்! சாலை எங்கும் தமிழ் ழுழங்கட்டும்! தமிழன் சாவை தடுத்து நிறுத்தட்டும்!

பட்சி சொன்ன க(வி)தை!

எங்கிருந்தோ ஒரு பட்சி வந்து சொன்னது மங்குவது போலிருக்கும் யாவும் மங்குவது கிடையாதென்று! எத்திசையும் எக்காளச் சிரிப்பு... சுற்றி வரப் பகைவனின் இருப்பு... வீழ்ந்துவிட்டோம் என்று இவர் நினைப்பு விழ விழ எழுந்த கதை பல இருக்கு! அப்போது தெளியும் மகிந்தனின் கிறுக்கு! கால காலமாய் நாமிருந்த மண் வேழம் போல் பொருதும் வீரம் நிறைந்த மண் நாணல் போல் விழுவதும் நேரம் பார்த்து எழுவதும் கூனல் வீரம் கொண்ட பகைவனுக்குப் புரியாது! புரியும் போது அவனுடலில் உயிர் தரியாது! அப்பாவிகள் பலர் இப்ப ஆவிகள்! புலி வேட்டையென்ற பெயரில் ஹெலியில் கூட வந்து குண்டு போடுகின்றீர் ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு தீனி போடுகின்றீர்! அடியும் உதையும் அண்ணன் தந்தால் புரியும் விடியும் போதே காட்சி மாறலாம் விந்தை எதுவுமில்லை முந்தை நடந்ததெல்லாம் சிந்தை நினைத்துப் பார்த்தால் ஆந்தை கூட அலறும் உம் ஆட்டம் கொஞ்சம் அடங்கும்!

புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது...

எத்தனையோ கனவுகளைச் சுமந்து கொண்டு எனக்குத் தெரிந்த மொழியில் கிறுக்கி வருபவன் நான். அந்தக் கிறுக்கல்களை பொறுமையோடு ரசித்து கருத்திட்ட அன்பர்கள் சிலர். கருத்திடாமலே மானசீகமாக வாழ்த்திய அன்பர்கள் பலர்... எங்கிருந்தோ ஒரு உள்ளம் ரசிக்கும் என்ற ஆர்வத்தில் தான் பதிவிடுகிறேன்... இந்த ஆர்வம் பிறக்கின்ற ஆண்டில் இன்னும் பெருக வேண்டும்... இன்னும் பலப் பல எழுதவேண்டும் என்பது என் அவா... அன்பர்கள் தொடர்ந்து அடியேனை ஊக்கப்படுத்தவேண்டும்... குறை நிறைகளை விமர்சிக்க வேண்டும்...  புதிய ஆண்டு... புதிய தீர்மானங்கள்... புதிய கனவுகள்... எல்லோர் கனவுகளும் கால் முளைத்து,  பிறக்கின்ற புத்தாண்டில் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். வாழ்த்துக்களுடன் கவி ரூபன்.  

புள்ளிகள் இடுவோம்...

காலம் இது காட்டும் புள்ளியில் நின்று கொண்டு ஒவ்வொருவராய் முடிந்தளவு புள்ளிகள் இடுவோம்... எங்கிருந்தாலும் மறவாது நீயும் ஒரு புள்ளியிடு புள்ளிகளுக்கு இடையில் தூரம் முக்கியமில்லை புள்ளிகளை இணைப்பது இப்போதெல்லாம் சுலபம்! தள்ளி நின்று புள்ளிகளை வேடிக்கை பார்க்கும் கரும் புள்ளி நீ எனில், இப்போதே போய்விடு! ஆனால், ஒன்றை மறவாதே காலம் கட்டாயம் உன் முகத்தில் செம் புள்ளி குத்தும்! பெரும் புள்ளி சிறு புள்ளி எனும் பேச்சே இங்கில்லை... சிறு துளியில் வந்தவன் தான் நீ ஆகவே சிறு புள்ளிதான் உன்னால் முடியும் என்று சிணுங்காதே...! நீ இங்கிடுகின்ற புள்ளிகள் தான் அண்ணனுக்குத் தெம்பு பிறகென்ன கிடைக்காதோ ஈழம் நீ நம்பு! ஒவ்வொரு தமிழனும் பகைவனுக்கு அம்பு!

ஊரின் நினைவலைகள்...

சொந்தம் சொல்லப் பலருண்டு ஆனாலும் அருகில் எவருண்டு? முந்தநாள் இறங்கி விளையாடியது போல் நினைவில் உள்ள என் வீட்டு முற்றமும் கூடி இருந்து ரசித்த சுற்றமும் போனதெங்கே? ஆளுக்கொரு திசையில் யார் யாரோ போட்டு வைத்த பாதையில் நடக்கின்றோம் எமக்கான பாதை வந்து போவார் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது! வீட்டு வளவில் நின்ற வடலிகளும் உயர்ந்த மனித தோரணை செய்யும் பனைகளும் காற்று வந்து ஓலைகளுக்கிடையில் ஒளித்து விளையாடுகையில் விதம் விதமாய் ஒலி செய்யும்! காய்ந்த ஓலைகள் சில களைத்து விழ குருத்தோலைகள் கைகொட்டிச் சிரிக்கும்! வாழ்க்கையின் வடிவான தத்துவம் அது! எங்கிருந்தோ ஒரு குயில் தன் குரல் செருமி 'ஒரு படப் பாடல்' பாடும்! கழுத்தில் மணி கட்டிய சில காளைகள் காலில் சலங்கை கட்டிய மங்கையரைப் பழித்துச் செல்லும்! அந்தி நேர வானச் சிவப்பைக் காட்டி தன் காதலியின் நிறம் பழிப்பான் காதலன் அவளும் விடாது 'அத்தான் கைவிளக்கை ஏற்று இருட்டில் உன்ன...

தலைவா வாழீ நீ!

Image
இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுதப் பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பிய கிளைகள் பிரசித்தமானது கொரில்லாவாகி மரபுசார் இராணுவமாகி அலை மீதேறி கடற் புலியாகி 'வானுமாகிப் பரந்த' பரம்பொருள் போல் வான் புலியாகி நீ பரப்பிய கிளைகள் பிரசித்தமானது! தலைவா, நீண்ட ஆயுள் கொண்டு எமைத் தீண்ட வரும் பகை அறுப்பாய் பகலவன் போல் தமிழீழ ஒளி கொடுப்பாய்! ------------------ 24-11-2008

கோழி எடுத்த பாடம்

Image
வட்டம் போட பழகுகிறதா வானில் சுற்றிவரும் பருந்து? கட்டம் வைத்து சுற்றியொரு சூழ்ச்சி வலை பின்னி கணத்தில் தரையிலிறங்கி தனிமையில் நிற்கும் குஞ்சைக் கவ்வி மீண்டும்  வானில் எழும் பருந்து! "விட்டம் பார்த்து நோட்டமிட்டது போதும்... வானில் வட்டமிடும் பருந்து போல உனை வாழ்வில் கொல்ல பலருண்டு... எழுந்து நில் தாழ்ந்து வரும் பருந்தை பாய்ந்து கொல்..." இப்படி பல சொல்லி தன் அடுத்த குஞ்சுக்கு பாடம் எடுத்தது தாய்க் கோழி! இழப்பு இடிந்து போகவல்ல...!