விட்டகலா நினைவுகள்!
கவியரங்கம் ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை இது. ஒலி வடிவமும் அதன் கீழ் வாசிக்கும் வகையில் கவிதையையும் இணைக்கிறேன். தமிழ் வாழ்த்து தோற்றமறியோம் இவள் தொன்மை அறியோம் தோகை இள மயில் போல் இவள் காட்டும் அழகறியோம் மூத்த பெண்ணாம் எம் முகவரி இவளாம்! தாயே தமிழே வணங்குகிறேன் உனை இக்கவிக்கு உனைவிட்டால் வேறு யார் துணை! அறிமுகம் யார் இப்பயல் என நீவீர் கேட்டால் பதில் ஏதும் இல்லை என்னிடம்! அடியேனுக்கே அது தெரியாதபோது சபையோருக்கு எப்படி உரைப்பது? ஆனாலும் ஒரு குறிப்பு தமிழ் பழகும் மழலை போல எழுதுவேன் பல கவிதை இதுவென எழுந்தாடுவேன் ஆகா கவிதை இதுவென நீவீர் மெய்மறந்திருந்தால் மறு நிமிடம் கால் வாருவேன்! கடைசி வரை தமிழன் புத்தி அது வென்பதால் பிழை பொறுத்தருள்க என் கவிதைக்கு காது கொடுத்தருள்க! கேட்கக் கூடாத பலவற்றை கேட்ட காது தானே? கொஞ்சம் தமிழும் கேட்கட்டும் கொஞ்சும் தமிழும் கேட்கட்டும்...