Posts

Showing posts from November, 2011

நடந்த கதை!–ஒலி வடிவுடன்…

Image
பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நின்ற மாவீரா்களை இறுதியில் மண்ணே சுமந்தது! தன்னோடு அணைத்து அழுதது பகையின் பூட்ஸ் காலின் அடியில் புண்பட்டுத் துடித்தது… நகை செய்து நின்றான் பகைவன்! பூவை இழந்து மானம் இழந்து அங்கம் இழந்து “அடுத்தது என்ன?” எனும் நினைவை இழந்து சொந்த மண்ணில் அகதி...