அயடீன் அரசாங்கம்!
குறிப்பு : அயடீன் உணவில் தேவையான அளவு சேர்க்காதபோது ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டது. கண்டத்தே நஞ்சை வைத்தான் பித்தன் நாம் பிறப்பதற்கு வழி வகுத்த சித்தன் அயடீனால் ஆனதென்ன நஷ்டம்? - எம் கண்டத்தில் தானே அழகற்ற வீக்கம்? மூளையிலும் முழுவளர்ச்சி இல்லை - எம் உடம்பிலும் ஒய்யாரமான நடை இல்லை அயடீன் அரசாட்சி யாரிலும் உண்டு - அது என்னை உன்னைப் பார்த்தா வருவதுண்டு? காரிகையவள் கண்டத்தில் காந்தத் தன்மை இன்றில்லை காரணம் அவள் அயடீன் உண்டதில்லை! கத்தி போலுள்ள புத்தியும் காணமல் போகுதே! கருத்தில் இருத்திக் காரணம் கண்டால் அயடீன் என விடை வருதே! நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி கண்டத்தின் முன்னே குரல்வளையின் இருமருங்கிலும் அரசாட்சி செய்வர் எம் உயிராட்சித் திலகர் தைராய்டு நோய்க்கும் தைலம் ஆகிடும் மருந்து அயடீன் என்றால் அது பொய்யானது இல்லை! மந்தபுத்தி உன் மண்டையில் இருந்தால் கற்றவரும் மற்றவரும் மதியாரே! - உன்னை ஓர் பொருட்டாய் எடுக்காரே! சோம்பிச் சோம்பி நீ திரிந்தால் செல்வம் உன்னைவிட்டுச் சென்றுவிடும் சொந்தமும் உன்னை வெறுத்து ஒதுக்கிவிடும் பெண்ணின் பருவம் ...