காதலர் தினத்தில் எழுதிய கவிதை...
பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சில நாள் பின்தொடர 'சீ பாவம்' என அவளும் புன்னகைக்க பரிதாபத்தில் தொடங்கியது காதல் பிறகென்ன கையோடு கை சேர்ந்து நடக்குமளவு நெருக்கம் வந்தது. பஸ்சில் ஏறினால் அருகருகே உரசி இருத்தல் கிசு கிசுப்பாய் காதல் வசனம் இன்னும் சில சொல்ல முடியாத சங்கதிகள் பாவம் பக்கத்தில் இருப்பவர் கூச்சத்தில் நெளிவார். காதலுக்கு கண்ணில்லை என்பது சரிதான்! கோல்பேஸ் வந்ததும் கையில் குடை விரியும் ஒதுக்குப் புறமாய் அமர்ந்து கொள்வார்கள் என்ன செய்வார்களோ யாம் அறியோம்! அது மட்டுமா? திரையரங்கில் நுழ...