2010 இல்…
இன்னொரு ஆண்டின்
இனிய பிறப்பு
வேண்டுவது என்னவென்று
அறியாது உள்ளுக்குள் தவிப்பு!
ஆள ஒரு நாடு வரும் என
கண்டு வந்த கனவு
மீள முடியாச் சோகத்தோடு
கலைந்து போனதென்ன நீ வினவு!
எழுகின்ற கேள்விகள்
எனக்குள்ளே பல நூறு
ஒவ்வொன்றாய் நீ வந்தே
பதில் கூறு!
விரிகின்ற பாதைகள்
தெரிகின்ற காட்சிகள்
சரிகின்ற உண்மைகள்
காலகாலமாய் நாமெல்லாம்
ஊமைகள்!
பிறக்கின்றாய் நீயென்று
துதிக்கின்றோம் நாமின்று
சிரிக்கின்ற உன் இதழ் கண்டு
பறக்கின்றது நம்பிக்கை வண்டு!
ஆண்டெனும் அழகு நங்கையே
அமைதி தருவாய் - எம்
முன்னெழும் இடா் எல்லாம்
களைந்தே விடுவாய்!
Comments
யாமே எம்தலையில் மண்வாரி யிட்டவர்கள்
ஏமாந்து விதியிழந்து வழியிழந்த
தமிழ்த்தாயின் குருடர்கள்
சுமைகொண்ட எம்மினத்தின் சுதந்திரத்தின் விடியலுக்காய்
தமையிழந்து தவித்தவர்கள்
இமைப்பொழுதும் இரத்தத்தால் ஈரமாய் ஆனவர்கள்
அமைந்தநம் தேசத்தில் ஒற்றுமையை நிலைநிறுத்தி மலர்கின்ற புத்தாண்டே தமிழர்க்குத் தாயகத்தை கொடுக்குமென்று என்கருத்தாய்
அழகொழுகத் தமிழ்கவியை தந்தவெம்
தாயகத்து உறவே நன்றி ஐயா உந்தனுக்கு!