Posts

Showing posts from December, 2009

2010 இல்…

இன்னொரு ஆண்டின் இனிய பிறப்பு வேண்டுவது என்னவென்று அறியாது உள்ளுக்குள் தவிப்பு! ஆள ஒரு நாடு வரும் என கண்டு வந்த கனவு மீள முடியாச் சோகத்தோடு கலைந்து போனதென்ன நீ வினவு! எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளே பல நூறு ஒவ்வொன்றாய் நீ வந்தே பதில் கூறு! விரிகின்ற பாதைகள் தெரிகின்ற காட்சிகள் சரிகின்ற உண்மைகள் காலகாலமாய் நாமெல்லாம் ஊமைகள்! பிறக்கின்றாய் நீயென்று துதிக்கின்றோம் நாமின்று சிரிக்கின்ற உன் இதழ் கண்டு பறக்கின்றது நம்பிக்கை வண்டு! ஆண்டெனும் அழகு நங்கையே அமைதி தருவாய் - எம் முன்னெழும் இடா் எல்லாம் களைந்தே விடுவாய்!

கசங்கிய காகிதங்களோடு…! - IV

Image
அன்னை தெரேசா ஏழைகளின் மீட்பர் அன்னை தெரேசா, எம்மை விட்டுப் பிரிந்த போது (5 புரட்டாதி 1997) எழுந்த சோகத்தில் இதயம் கக்கிய வார்த்தைகளை ஒழுங்குபடுத்தியபோது…!   வானொலி கூட ஒரு கணம் விசும்பியது மறுகணம் செய்தி என்னவென்று விளம்பியது கவலைக் காளான்களால் இதயம் நிரம்பியது கடவுளே! மனிதக் கடவுளை ஏன் விண்ணுக்கழைத்தாய் என்றொவ்வோர் மனமும் புலம்பியது! "அன்னை" என்று அகிலத்தார் அழைக்க தன்னை உருக்கி ஒளி உமிழும் மெழுகுவா்த்தியாய்... முன்னைப் பிறவியில் நாம் செய்த தவத்தால் பொன்னை நிகர்த்த ஒளி வடிவாம் அன்பின் மறுவடிவாம் அன்னை தெரேசா! அழும் கண்களோடு எமை விட்டு மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார்! பாழும் கிணற்றில் வீழும் ஏழை வாழ்வை நாளும் காத்திடவே சீரும் சிறப்பாய்ச் சிகரம் ஏற்றிடவே நகரம் பல நாடி - அவா் வாழ்வு கண்டு மனமிக வாடி ஏழைகளைக் காத்துநின்றவா்! எமை ஏங்கவிட்டு எட்டாத இடத்தினுக்குச் சிட்டாகப் பறந்து விட்டார்! - எமை விட்டுப் போக அவா் எப்படித் துணிந்துவிட்டார்? பிணி கொண்டவா் பால் அவா் பிரிந்து நின்றதில்லை அவரிடம் பர