சோகம்

கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும்
காதலியைக் காணவில்லை
வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின்
நிலை மாறவில்லை
தேரில் வரும் சாமியைக் கும்பிட
வழியில்லை
ஆமி செய்யும் அட்டகாசம்
ஓயவில்லை

சமாதானம் சமாதானம் என்று வீண்
கோஷம் போடுவதில் அர்த்தமில்லை
எல்லோரும் சமமென்று நினைக்கும்
வரை நிம்மதியொன்றில்லை
விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை
தன் மதி தான் தனக்குதவி என்று
உணரும் வரை வளர்ச்சியில்லை

விலைவாசி குறையவில்லை
மலைவாசி சிறப்புடன் வாழவில்லை
எந்தவாசியும் எமக்கில்லை - சிவன்
ஆசி மட்டும் இருந்தால்
தொல்லையினி இல்லை

மனிதனை மனிதன் புரிந்து கொண்டால்
ஓர் சண்டையில்லை
எல்லை கேட்டு போரிடவும்
தேவையில்லை
சாதிகள் ஆதியில் இருந்து
வந்தவையில்லை
சாமிகள் சாதியை உண்டாக்கவில்லை
பூமியே நீயேன் இன்னும்
நித்திரையின்று விழிக்கவில்லை?

பணம் உள்ளவரை நித்திரையில்லை
நிம்மதியில்லை
பணம் இல்லையெனில்
வயிற்றுக் குணவில்லை
மகிழ்சியில்லை

அன்பில்லையெனில் ஆத்ம சுகமில்லை
ஆதிதன்னை அகத்துள் நினைத்திருந்தால்
ஆபத்தொன்றினியில்லை அச்சமென்பதில்லை
ஆனந்தம் வேறில்லை

Comments

சரியா போச்சு கவி ரூபன். நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் அத்தை மகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று இக்கவிதையின் மூலம் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

ஆம் ஆம். அன்பு ஒன்றுதான் இப்புவியின் அனைத்து உயிர்களையும் இயக்கும் அற்புத ஈர்ப்புச் சக்தி. அதுவே ஆதியும் அந்தமும்.

//விலைவாசி குறையவில்லை
மலைவாசி சிறப்புடன் வாழவில்லை
எந்தவாசியும் எமக்கில்லை - சிவன்
ஆசி மட்டும் இருந்தால்
தொல்லையினி இல்லை // இந்த இடத்தில் என்னை அறியாமல் கொஞ்சம் சிரித்துவிட்டேன்! ;-)

கவிதையில் எதுகை மோனை சரிவர அமையவில்லை போல் தெரிகிறது. கவிதையின் கடைசியில் திடீர் திருப்பங்கள் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த முறை ஒலி வடிவத்தில் இல்லையா?

பகிர்ந்தமைக்கு நன்றி கவி ரூபன். நல்ல முயற்சி. தொடருங்கள்.
நன்றி மாசிலா உங்கள் ரசனைக்கு...

ஒலி வடிவத்தில் எல்லாக் கவிதைகளையும் கொண்டுவருவது தான் என் விருப்பம். என் குரல் எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்துகிறதா தெரியவில்லை... [எங்கிருந்தாவது இறக்குமதி செய்யலாமா? ;-) ]

பதில் எழுத நீண்ட நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும்...

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்