வாராய் சித்திரையே...

சித்திரையாள் நித்திரையோ?
சிதைந்த எம் வாழ்க்கை காணலையே!

எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை
நன்மை நடந்ததா இதுவரை?

புதுச் சித்திரை மாது நீ
நன்மை நடத்த வந்த தூது நீ

துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும்
தூங்கவை துவக்குகளை

காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ
உலகை விட்டு
இரக்கமில்லா மனிதப் பிராணிகளை
கொளுத்து நீ விசாரணை விட்டு
இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு
சாமாதான கீதங்களை இதயவீணை தோறும்
மீட்டி விட்டு
உலகைப் பார் கார்ச்சியளிக்கும்
கவலை விட்டு

கதிரை விளித்துப் புதிரை அவிழ்க
விடிவே நீ வாராய்
விரைந்தே நீ வாராய்

நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும்
நீயே எமக்குக் கதி
இதுவே எமது துதி

எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது
அண்டி வந்து தொட்டுப் பாரேன்

சரிகைப் புடவை நீ உடுத்தவில்லை
சாமாதானப் புடவை உடுத்தியுள்ளாய்

ஓ! அதனால் தானோ
உனக்கு இத்துனை வரவேற்பு?!

கையிலென்ன? வெள்ளையாய்...
வெண்புறாவா? நன்று! நன்று!!
நானிலம் எங்கும் பறக்கவிடு
கவலை மறந்து வாழவிடு...

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்