சமா(ர்)தானம்!

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள்.

ஏன் இவர்களுக்குத்
தெரியவில்லை
'சமர்' தானம்
செய்யப்படுவது தான்
'சமாதானம்' என்று!

சடைத்த பனைகளின்
தலைகோதிச் சிக்கெடுத்து
விரல் இரத்தம் கசியப்
புன்னகைத்த
காற்றைப் போல
நாங்களும்...!

சிக்கெடுக்கும் முயற்சியில்
வெளியாரும்...!

சிங்காரக்
கொண்டைக்காரி,
தலை அவிழ்த்து
உதறி ஈரோடு பேன்
விரட்டு மட்டும்
விடிவில்லை!

காரோடு,
கண்ணாடி மாளிகை
கண்ணசைப்பில்
காரியமாற்ற
'குண்டர்களின்'
தோழமை!

வேரோடு
அறுப்பதாகப்
பேச்சு!
வெற்றுத்
தோட்டா
நமக்கா
கூற்று?

யாரோடு
நமக்கென்ன
பேச்சு...?
தம்பி,
போராடிப்
புலிக்கொடியை
ஏற்று!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்