நவ நங்கை!

கையில்லாச்
சட்டை!
தணிக்கையில்லாத்
தொடை!
சாயச் சிவப்பில்
சமாதியாகிப் போன
உதடுகள்!
புருவ மேட்டில்
கருமேகக்
குவியல்!

இரவு உடையில்
வீதி உலா!
தேரொன்று
நடப்பதாய்
எம்மவர் கண்கள்
இமையா(து)
தவம் இயற்றும்!

தடுக்கி விழும்
இதயம்
எடுக்கி
அணைத்தால்(ள்)
சொர்க்கத்தில்
பயணம்!

இளமை வெட்டி
ஒட்டிய 'லேபிள்கள்'
உற்றுப் பார்த்தால்
எல்லாம் போலிகள்!

உதடு பிரிந்தால்
வார்த்தைகளுக்கு
வலிப்பு எடுக்கும்!

ஆங்கிலம்
நிர்வாணம்
ஆகும்!

மூலையில்
தமிழ்
முக்காட்டுடன்
மெல்ல
விசும்பும்!

பார்வை
வண்டுகள்
சிறகடிக்கும்
ரோஜாவென
யோசித்து
மயங்கும்!

குதிக்கால்
உபயத்தில்
உயர்ந்து
விடுவார்கள்!

குதிரை ஓடுவதாய்
ஏமாந்து போவோம்

அங்க ஆராய்ச்சி
செய்ய
எம்மவர்க்கு
வசதியாய்
கண்ணாடி
உடை!

விழியோடு
அசையும்
காமன்
படை!

நீள்முடிக்கு
தேய் பிறை
போலும்!

நிமிர்ந்த
பார்வைக்கு
பஷ்பமாவதே
எம்கதை
காணும்!

நாகரீகம்
மீண்டும்
பிறந்த
இடத்தை
நோக்கி!

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20415

Comments

Anonymous said…
யதார்த்தமான உண்மை.சிலரிற்கு புரிவதில்லை, கண்காணா தூரத்தில் தம் இரத்தங்கள் படும் அவலம். நாகரீக மோகத்தில் வெளிப்பகட்டிற்காய் அடுத்தவன் போல் வாழமுயலும் எம் நங்கையரின் நாடகங்கள் அழகான முறையில் அம்பலப்படுத்தியுள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்....
பாரதி,

உங்கள் வருகைக்கு நன்றி... கருத்திற்கும்... சிலர் என்னைத் திட்டவும் செய்கிறார்கள்... என்ன செய்ய...

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை