மலர் வனம் வாடியதேன்?

(முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... )

கண்மணிகள்
சோலை மீது
வான் பறவை
பறந்தது!

வடிவான
வளர் இளம்பிறைகளை
வாடி வதங்கச்
செய்தது!

தலைவன் அடி
தாங்காது ஓடி
மறையும்
கோளைகாள்...
பேடித் தனம்
செய்தனீர்! - உம்
கோர முகம்
காட்டினீர்!

கொலர் உயர்த்திக்
கொக்கரிக்காதீர்...

மலர்களைப்
பறித்த
உங்களுக்கு
மரணப் படுக்கை
ரெடி!

'கலர்' கனவு
ஏதேனும்
இருந்தால்
தீர்த்துக் கொள்ளும்!
உம்
'உயிர்'ப்பறவை
பறக்குமடா
சீக்கிரம்!

அழுது வடிவதால்
ஏதும் ஆகாது
தோழரே!

சர்வதேச
அரச மேடைகளில்
குருத்துகளில்
குருதி பூசியவன்
முக மூடி
கிழிப்போம்
மூச்சுத் திணறத்
திணறக் கிழிப்போம்!

இப்படி ஏதேனும்
நடந்தவுடன்
சோகமாய் கூடிக்
கதைத்து
அழுவதாக
பாசாங்கும் செய்து
வழமைக்குத்
திரும்புவதே
எம்மினச் சாபம்!

காயம் பட்டவுடன்
கத்துவதல்ல
முக்கியம்!
எமக்குள்ளேயே
புலம்பித் திரிவதால்
ஆவதொன்றுமில்லை!

உலகின்
பார்வையில்
கொணர்ந்து
உண்மை நிலை
உரைப்பதே நலம்!

தோழர்களே
உள்ளத்தில்
நெருப்போடு
இருங்கள்!

மொட்டுக்களைப்
பிய்த்தவன்
பொசுங்கிப் போவான்!

இறுதியாய்
ஒன்று...
கண்மணிகாள்...
சொர்க்கதிற்கு
நாளை உமக்கு
அழைப்பு வரும்
தமிழீழ வாசலில்
கோலமிட...!!!

கண்மணிகாள்,
கோவியாதீர்
என தன்பை,
அழுகையை
வேறெப்படிச்
சொல்வேன்?

----------------
கவி ரூபன்
14-08-2006

___________
யாழ் களத்தில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=20262

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்