எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!

முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர
என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே
எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு?
அசைந்துவரும் உன் இடையதிலே
கட்டிவிட்டேன் என் மனமதையே
மாயமாய் சென்று மறைந்தனையே
நீ மங்கை தானா மறுமொழி கூறடியே
தங்கம் என மின்னும் உடலோடு
சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு
அன்னம் என எழிலுறும் நடையோடு
மொத்தம் இதுவென நித்தம் பருகிட
கருவண்டு நானென ரோஜா நீயென - என்
அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை
பசியாற பணி செய்யும் பாவை நீயென
மகிழ்ந்தனன் நான்...
இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில்
மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும்

பாவி கொடும்பாவி என்னாவி
துடி துடிக்க வைத்த மாபாவி
என்னவாகி நான் போனேன்...
திரளான மேனியதும் தளர்வாகிப் போனதுவே!
துரும்பாகி, நூலாகி, உலையிடை கொதிக்கும்
மெழுகாக ஆகி இப்போது நான்...
என்னாகிப் போனேன்...
பெண்ணாகி நீ வந்த பாவத்தால்
என்நிலை இதுவாகிப் போனதுவே!

கள்ளுக் குடங்கள் என இரண்டழகு
காட்டிய போதையால் வந்த அழிவு இது
பேதை என்று நின்னையே எண்ணி
பாதை தவறிய பாவத்தின் பரிசு இது!

எச்சில் வழி கடத்தினாய் எச்.ஐ.வீ யை
வேடிக்கைக் காரி...
இல்லை இல்லை எச்.ஐ.வீ கடத்தும்
வாடிக்கைக் காரி...
எச்.ஐ.வீ என்னுள் எகிறி எகிறிப் பரவுகிறது
என்னாவி பதறி பதறித் துடிக்கிறது
என்நிலை கண்டு உன்னாவி சிரிக்கிறது!

நீ சிரிக்கிறாய் நான் அழுகின்றேன்
நீ நடிக்கின்றாய் நான் துடிக்கின்றேன்
அந்தோ என்மனம் புலம்புகிறது
கருமை நிறமாயொன்று எருமையில் வருகிறதே
அருமை உயிரைக் கவர பாசத்தை வீசுகிறதே
தூக்கினுள் தொங்கும் நிரபராதியாய்
காலன் பாசத்தினுள் என்னாவி துடிக்கின்றது
உன்னைத் தானடி அது சபிக்கின்றது
இதற்காய் காத்திருந்தது போன்று
கைகொட்டிச் சிரிக்கின்றாய்
கள்ளுக் குடங்கள் குலுங்க குலுங்கச் சிரிக்கின்றாய்
நாட்டியப் பாத்திரம் நீ காட்டிய தந்திரம்
அற்புதம் ... அற்புதம் ...
ஆட்டியது அவனேயானாலும் ஆதாரம் நீ அல்லவா?
எடுப்பது அவனேயானாலும் காரணம் நீ அல்லவா?
என்போல் எத்தனை பேர் உன்போல் போதை
அழகிகளால் தூக்கிடை புகுந்தனரோ?
செப்பிட ஒருவர் இங்கில்லை அருகில்...
விண்ணகம் புகுந்து நானே தெரிந்துகொள்கிறேன்
அதுவரை யாரையும் தூக்கிடை
தொங்க வைக்காதே...
நீயோர் நல் நாட்டியக் காரியே
உளமாரச் சொல்கிறேன் நீயோர்
நல் நாட்டியக் காரியே!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை