யன்னல் நிலா

யன்னல் ஓரம்
மின்னல் எழுதும்
வண்ண ஓவியம்

கண்களிரண்டும்
காளை என்னை
அழைத்துப்
படிக்கும் காவியம்!

செம்மண் நிறத்தை
கண்முன் நிறுத்தும்
கன்னத் தாமரை!

இதழ்கள் வடிக்கும்
தேனைக் குடிக்கும்
கருவண்டு ஒன்று
அங்கே மோட்சங் கண்டு
மச்சமானதே!

செவ்விளநீரென்ன
இரண்டு தனங்கள்
செதுக்கி வைத்த
சித்திரம்!

இதழ் சிவந்த
ரோஜாவென்று
முள்ளிருக்கும்
கள்ளியை
முகர்ந்து
பார்த்த
முட்டாளம்மா!

மிரளும் விளியில்
மானை யொத்த
பெண்ணவள்,
உலவும் உயிரை
உறவு அறுக்க
வைத்தாளே

கலவும் வேளை
காமத் தீயில்
அவித்தவள்

நிலவும் நின்று
ரசிக்கும் வண்ணம்
காதல் ரசம்
செய்தவள்

உலகும் அழியும்
என்றாலும்
எந்தன்
உண்மைக்
காதல் அழியாது
என்றே கூறம்மா!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை