இன்றைய பொங்கல்!

நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

மேலிருந்து சூரியன்
பார்த்திருக்க
சுற்றி நின்று சுற்றத்தார்
காத்திருக்க
முற்றத்தில் அடுப்பு மூட்டி
புதுப் பானை அடுப்பேற்றி
பொங்கியது உண்டு
ஊரில்!

அவ்வழக்கம் இங்கில்லை
இப்போது!

உள்வீட்டில் பொங்கல்
பாவம் சூரியன்
பல முறை எட்டிப் பார்த்தும்
பொங்கல் பானை பார்க்கும்
பாக்கியம் இல்லை அவனுக்கு!

சுற்றத்தார் எங்கிருந்தோ
குறுஞ்செய்தி, தொலைபேசி
முகப்புத்தகம், ருவீட்டர் என
பல வடிவில்
"Happy Pongal" என்றார்!

ஏன் பொங்குகிறோம்
என்று அறியார் பலர்
ஏதோ பொங்குகின்றார்

ஏற்பாடுகள் ஏட்டிலே தங்கிவிட
பொங்கல் பானையில் தங்கிவட
உள்ளங்கள் பொங்குவதில்லை இங்கே
உவகை அதில் நிறைவதில்லை

பிள்ளை கேட்பான்
"ஏன் அம்மா பொங்கல்?"
அம்மாவுக்கே அது தெரியாத போது
எங்கிருந்து அவள் உரைப்பாள்
"அப்பாவிடம் கேள்..."  என்பாள்
ஓடியே போவான்
பாவம் அவன்!

Comments

போகப் போக இவ்வாறு நடக்கவும் சாத்தியமுண்டு இக் காலத்தில் !
சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களும்
சகோ .
அம்பாளடியாள், உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...! உங்க வீட்டுப் பொங்கல் எப்படி?
தமிழர் பண்பாடுகள் மறைக்கப் படுகிறதோ?
பொங்கள் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கண்ணதாசன்...
பொங்கல் வாழ்த்துக்கள் தனபால்...
Anonymous said…
வணக்கம்

காலந்தான் பதில் சொல்லும் வேண்டும்......
சிறப்பான கருத்தாடல்மிக்க வரிகள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க பாண்டியன்...

தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்... உங்களுக்கும் என் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்...!

//காலந்தான் பதில் சொல்லும் வேண்டும்......
சிறப்பான கருத்தாடல்மிக்க வரிகள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//


நன்றி ரூபன்.

தங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

மீண்டும் நன்றி.

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்