Posts

Showing posts from 2012

குழந்தை பிறந்த போது…

எந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக்கிது எத்தனையாவது வருகையோ? கால் கொண்டு உதைக்கின்றாள் கை கொண்டு அடிக்கின்றாள் பூவுக்கு கை, கால் முளைத்ததென எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்! சிறு வாய் திறந்து கொட்டாவி விடுகிறாய் மெல்ல எட்டியே பார்க்கிறேன் நான் உலகமேதும் உள்ளிருப்பதாய் தெரியவில்லை - ஆனாலும் நீயே என் உலகமென ஆன விந்தையதுவும் புரியவில்லை!   ஒலி வடிவம்: ------------------------ 09 புரட்டாதி 2012

காதல் விருந்து!

காதல்  அடிக்கடி  விருந்துண்ண  அழைக்கின்றது இலை விரித்து பந்தி  பரிமாறும்  வேளையில்  அடுத்த  பந்தியில் அமருமாறு  அறிவிக்கின்றது!

வேலை முடிந்து வீடு திரும்புகையில்...

இரவு நேர வேலை முடிந்து பஸ்சில் வரும்போது பல சிந்தனைகள் மனசில்.... கவியுள்ளம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது... முடிவில்லாவிட்டாலும் தொடங்கிய வரிகளை பதிந்து கொள்ளத் தோன்றியது. /* காதல் நிராயுதபாணிகளையே குறிவைத்து நடக்கும் அழகிய யுத்தம் மலர்க் கணை எய்தவளே மடியில் தாங்கி தருவாள் முத்தம்! தோற்றவன் மடியில் வென்றவள் இங்கே தோற்றவர் தான் வென்றவர் */ /* வீதியில் நடந்து வரும்போது இரவு கொட்டிய Snow இல் புற்கள் எல்லாம் வெள்ளையாக... உடனே நான், புற்களுக்கெல்லாம் நரை விழுந்தது எப்படி? */

காலத்தின் பிறந்த நாள் (2012)!

Image
விழி மூடிய கனவுகள் விழி திறக்கும் நாளை பனி மூடிய புல் வெளி பனி விலகிச் சிரிக்கும் காலை! இனி உனக்குச் சொந்தமில்லை கவலை தனி வழி திறக்கும் கவனி… போகலாம் பவனி எழுந்து முன்னே வா! காலத்தின் பிறந்த நாள் புதுப் புஸ்பங்கள் பூக்கும் நாள்! கடந்த நொடி திரும்பாது பிறக்கின்ற பொழுதுகள் உனதாக்கு! இழந்த சோகம்  ஆயிரம் இருக்கும் இரும்பாகு… காலம் துடைக்கும் கண்ணீா் என்ற ஞானம் கூட வேணும்! எப்போதும் அழுகின்ற கூட்டமா நாம்? காட்சியிது மாறும் காலதேவன் கணக்கது அப்போது புரியும்! -------------------------- 31 மார்கழி 2011