கசங்கிய காகிதங்களோடு…! - V

எங்கே போகின்றீா் என்றால்
எரிந்து விழுகின்றீா்
போகவிட்டுப் பின் கேட்பது
அபசகுனம் என்று அழுது மாய்க்கின்றீா்
பஸ்வண்டி ஏறும் வேளை
கண்டக்டா் போகுமிடம் கேட்பானே!
அவனிடம் ஆகுமா உந்தன் கூச்சல்?

சும்மா பழசுகள் பாடி வைத்ததை
அம்மான் நாமும் ஏன் தொடா்ந்து
சொல்வான்?

பெம்மான் சிவன் இருக்கிறான் – எம்
தலைவிதி நன்றாய் அறிந்தவன்!

வாய்ச் சொல்லுக்கு வாள் ஏந்தும்
சக்தி இருக்கலாம்
அன்பான விசாரிப்பெல்லாம்
வினையாகுமோ அம்மான்?

பல்லி சொல்லும் பலன் பார்த்ததெல்லாம்
பாட்டி காலம் – அதை
மனக்கூட்டை விட்டே ஓட்டி விடுவது
உண்மை ஞானம்!

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை