யாழ் களக் கிறுக்கல்கள் - XIII

கிறுக்கல் 41:

இறைவா
மறைவா(ய்) இருக்கும்
தலைவா

ஒளியோ இருளோ
உன் நிறம் எதுவோ
தெரியேன்

பழியோ பாவமோ
நீ போட்ட பாதையில்
எவை எவை
வருமோ அறியேன்

நடக்கின்றேன் தனியே
தந்தை விரல் பற்றி
நடக்கும் சிறுவன் போல்
உன் விரல் தேடி
அலைகின்றேன்

பற்றுவேன் ஒருநாள்
பற்றிய பற்றுக்கள்
பட படவென
அறவே!

 

கிறுக்கல் 42:

கூட வரும் கூட்டம்
கூடை நிறைப்
பூக்கள் கொண்டு வரும்!
கூடு விட்டுப்
போன பின்னால்
'பிணம்' எனும்
பெயரும் வரும்!

ஏடு எடுத்துப் படித்தும் என்ன
ஓடி ஓடி உழைத்தும் என்ன
மாடி வீட்டு மைனரானாலும் என்ன
கூடு கழட்டி உயிரார் பறந்த பின்
சூடு வாங்கி எரிந்து போகும் தேகம் - ஒரு
பிடிச் சாம்பலாகிப் போகும் பாவம்!

நிலையாமை தெரிந்தும்
ஏனிந்த அறியாமை
நான் இன்று போனால்
நீ நாளை வருவாய்!

நீயும் நானும்
பூமியின் விருந்தினர்
அனுமதி நீட்டிப்பு
என்ற கதையே
இங்கில்லை..!

அனுமதி இருக்கும் வரை
அனுபவி
'சக மனிதன்' என்கின்ற
அறிவு கடந்து
'சக பயணி' என்கின்ற
நாகரீகம் உனக்குள்ளே
பிரசவி

சண்டை ஏன்
நமக்குள்ளே
கெண்டை மீன்
பாய்கின்ற அழகில்
மனசெல்லாம்
சந்தோசம் கொள்ளாமல்
சண்டை ஏன் நமக்குள்ளே?

போடா போ
போகாத ஊருக்கு
நான் ஏன் சொல்வான்
வழி...?

Comments

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்