Kaviyarankam Baner

Tuesday, 3 August 2010

கசங்கிய காகிதங்களோடு…! - VI

நாளை நாளை என்று மனிதன்
சொல்வதுண்டு
பாவம் பாவம் என்று கடவுள்
நினைப்பதுண்டு

வருகின்ற காலங்கள்
தருகின்ற இன்னல்கள்
அறிந்துள்ள மனிதா்கள்
இருந்தால் சொல்லுங்கள்!

**************************

கண்ணே…
உன் வாயுதிர்
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என்
ஆராய்ச்சிப் பொருள்!

காதலின் முன்
ஒரு பொருள் தந்த
அதே வார்த்தை 
கலியாணத்தின் பின்
வேறொரு அா்த்தத்தோடு…

மனசை உணா்வை
அன்பை மொழிபெயா்க்கும்
முயற்சி வார்த்தைகள்!

ஒன்று தெரிந்து கொள்
உச்சரிக்கப்படுகின்ற
உதடுகளைப் பொறுத்தே
வார்த்தைகள்
அா்த்தப்படும்!

Thursday, 17 June 2010

கசங்கிய காகிதங்களோடு…! - V

எங்கே போகின்றீா் என்றால்
எரிந்து விழுகின்றீா்
போகவிட்டுப் பின் கேட்பது
அபசகுனம் என்று அழுது மாய்க்கின்றீா்
பஸ்வண்டி ஏறும் வேளை
கண்டக்டா் போகுமிடம் கேட்பானே!
அவனிடம் ஆகுமா உந்தன் கூச்சல்?

சும்மா பழசுகள் பாடி வைத்ததை
அம்மான் நாமும் ஏன் தொடா்ந்து
சொல்வான்?

பெம்மான் சிவன் இருக்கிறான் – எம்
தலைவிதி நன்றாய் அறிந்தவன்!

வாய்ச் சொல்லுக்கு வாள் ஏந்தும்
சக்தி இருக்கலாம்
அன்பான விசாரிப்பெல்லாம்
வினையாகுமோ அம்மான்?

பல்லி சொல்லும் பலன் பார்த்ததெல்லாம்
பாட்டி காலம் – அதை
மனக்கூட்டை விட்டே ஓட்டி விடுவது
உண்மை ஞானம்!

Sunday, 30 May 2010

யாழ் களக் கிறுக்கல்கள் - XIV

கிறுக்கல் 43:

என்ன நடந்தது
என்றெனக்குத் தெரியாது

முன்னம் போல்
முறுவல் இல்லை
முகத்தில்!

கன்னம் சிவந்து
காத தூரம் ஓடி மறையும்
காதல் இல்லை
நெஞ்சில்!

இன்னும் இளகிய
உன் சிந்தை
காணவில்லை

முன்னும் பின்னும்
அற்புதங்கள் காட்டும்
அழகவை போனதெங்கே
பிள்ளை?

விளங்காத கவி சொல்லும்
விரிகின்ற கண்களின்
ஒளி மறைந்ததும் என்ன?

பல நூறு துச்சாதனர்கள்
கூடி மான பங்கம்
செய்தது போல
அழகிழந்ததும் என்ன?

"ஈழம்" எனும் பேர்
தாங்கி நின்ற பெண்ணே
எப்போது துடைப்போம்
உன் துயர்?

 

கிறுக்கல் 44:

வலிகள்
மனதில் கவலை
எழுதும் வரிகள்!

மொழிகள் பலவிருந்தும்
என்ன பயன்?

உன்கண்ணடி பட்டு
கண்ணாடி போல்
உடைந்த உள்ளத்தின்
வலி சொல்ல
எந்த வார்த்தையும்
அகப்படவில்லை!

என்னடி எனக்குள்
செய்தாய்?
ஓரடிக் கவிதையில்
ஔிந்திருக்கும்
அத்தனை அதிசயமும்
உன் ஓரங்குலப் புன்னகையில்!

ஈரடி இடைவெளி
இன்னும் எமக்குள் ஏன்?

தேனடி உன்னுதடு என்று
நான் உண்ணும்
காலமதும் எப்போது?

மானடி உன் விழியென்று
மயங்குவதும் எக்காலம்?

இரு கை திறந்து
காத்திருக்கிறேன்
பறந்து வருவது
உன் பொறுப்பு!

Tuesday, 25 May 2010

யாழ் களக் கிறுக்கல்கள் - XIII

கிறுக்கல் 41:

இறைவா
மறைவா(ய்) இருக்கும்
தலைவா

ஒளியோ இருளோ
உன் நிறம் எதுவோ
தெரியேன்

பழியோ பாவமோ
நீ போட்ட பாதையில்
எவை எவை
வருமோ அறியேன்

நடக்கின்றேன் தனியே
தந்தை விரல் பற்றி
நடக்கும் சிறுவன் போல்
உன் விரல் தேடி
அலைகின்றேன்

பற்றுவேன் ஒருநாள்
பற்றிய பற்றுக்கள்
பட படவென
அறவே!

 

கிறுக்கல் 42:

கூட வரும் கூட்டம்
கூடை நிறைப்
பூக்கள் கொண்டு வரும்!
கூடு விட்டுப்
போன பின்னால்
'பிணம்' எனும்
பெயரும் வரும்!

ஏடு எடுத்துப் படித்தும் என்ன
ஓடி ஓடி உழைத்தும் என்ன
மாடி வீட்டு மைனரானாலும் என்ன
கூடு கழட்டி உயிரார் பறந்த பின்
சூடு வாங்கி எரிந்து போகும் தேகம் - ஒரு
பிடிச் சாம்பலாகிப் போகும் பாவம்!

நிலையாமை தெரிந்தும்
ஏனிந்த அறியாமை
நான் இன்று போனால்
நீ நாளை வருவாய்!

நீயும் நானும்
பூமியின் விருந்தினர்
அனுமதி நீட்டிப்பு
என்ற கதையே
இங்கில்லை..!

அனுமதி இருக்கும் வரை
அனுபவி
'சக மனிதன்' என்கின்ற
அறிவு கடந்து
'சக பயணி' என்கின்ற
நாகரீகம் உனக்குள்ளே
பிரசவி

சண்டை ஏன்
நமக்குள்ளே
கெண்டை மீன்
பாய்கின்ற அழகில்
மனசெல்லாம்
சந்தோசம் கொள்ளாமல்
சண்டை ஏன் நமக்குள்ளே?

போடா போ
போகாத ஊருக்கு
நான் ஏன் சொல்வான்
வழி...?

Related Posts Plugin for WordPress, Blogger...
பின்னூட்டல்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்