Posts

Showing posts from February, 2009

யாழ் களக் கிறுக்கல்கள் - XI

கிறுக்கல் 35: யாவும் என்றோ முடியும் ஆகும் அத்தனையும் அழியும் என்ற விதியின் படி யாவும் என்றோ முடியும்! நீயும் நானும் நொடியில் மயான மடியில்! சாவின் மடியில் சண்டியனும் போவான் நொடியில்! தாயின் பாலில் உடம்பில் ஓடும் இரத்தம் நோயில் விழுந்து பாயில் படுத்த பின்னர் ஓடி அடங்கும்! வாழும் நாளில் சூழும் சோகம் வாடி வதங்கிச் சோரும் நெஞ்சம்! ஆழும் கடவுள் அருள் ஒன்று தரவேண்டும் நாளும் பொழுதும் சோகச் சுவடறுத்து சிந்தனைச் சுடர் வளர்த்து தூய அன்பில் உயிரத்தனையும் மூழ்கி தேட வேண்டும் பெரும் வாழ்வு தரும் ஜோதி!   ----------------- கிறுக்கல் 36: மனதில் ஆசையோடு எனக்கொரு ஆணைபோடு மடியில் வந்து விழுந்து மங்கை உன்னை வீணையென மீட்டுவேன்! நாளை என்று இன்னொரு நாள் தேவையில்லை ஆளையாள் அணைத்துக் கொள்ள ஐயர் வந்து நேரம் பார்க்கத் தேவையில்லை! காலை விடியும் பொழுதில் கற்கண்டு நினைப்பில் உன் முகத்தை வெட்கம் மெழுகும் நல்ல சமயமென்றுணர்ந்து என் கை உ

யாழ் களக் கிறுக்கல்கள் - X

Image
கிறுக்கல் 31: தொடர்வதேனோ என்னை? நிமிர்ந்து பார்த்து நிலவைக் கேட்டேன்! தலை கவிழ்ந்து முகம் பார்த்துச் சொன்னது நிலவு... களவு போன என் உள்ளத்தை களவாடிய கள்வன் இவனா என அறியத் தொடர்ந்தேன்!   ----------------- கிறுக்கல் 32: அவனாகட்டும் உன் காதல் வானம் - உன் செவ்விதழாகட்டும் அவன் பருகும் தடாகம்! மொட்டு அவிழட்டும் அவன் கைகள் பட்டு சொட்டுச் சொட்டாய் ஜீவன் உருகட்டும் கட்டு அவனை காதலில் கட்டு விட்டுப் பறக்காது இனி அவன் காமனின் சிட்டு! காட்டு உன்னழகை அவன் முன் காட்டு பார்த்து கண்கள் இமைக்காது பார்த்து எழுதுவான் பல பாட்டு! நிப்பாட்டு மின்சாரத்தை அவன் ஆழட்டும் உன் அழகின் சாரத்தை!!!   ----------------- கிறுக்கல் 33: வெல்லலாம் பெண் மனதை என்று வெளிக்கிட்டால் வில்லெல்லாம் பழுது பார்த்து - எனைக் கொல்லலாம் என்று முடிவுகட்டி கொவ்வையிதழ் வெடிப்புக்களில் எனை வீழ்த்தி புருவ வில் வளைத்து பருவக் கணை தொடுத்து நிராயுதபாணியைக் கொல்கின்றீரம்மா! நிறு

யாழ் களக் கிறுக்கல்கள் - IX

கிறுக்கல் 27: முத்தங்களை நான் தருவேன் அர்த்தங்களை நீ புரிவாயோ? வித்தகக் கவியிவன் விண்ணாளாவும் தமிழோடு விளையாடும் வெள்ளை நிலாவே கொள்ளையழகும் சின்னவிதழும் நான் சுவைப்பேன் சிணுங்காமல் சிறைப்பட்டு நீ கிடப்பாயா? பாஷை பல பேசி நேர முட்களை சோம்பலோடு நோக்குவதென்ன? ஆசை புரிய வைக்க அன்பால் சிறை வைக்க மீசை குற்றினாலும் மிடுக்காக நான் தரும் முத்தங்களே பல பாஷை பேசுமடி! பதிலாக நீ ஏதும் பேசாதே... சரியாகக் கணக்கிட்டு முத்தங்கங்களைத் திருப்பித் தருவாயா?   ----------------- கிறுக்கல் 28: நீ எய்கின்ற கவிப் பூக்கள் நன்று நிமிடத்தில் பல கவிதை எனக்குள்ளே தோன்றதடி இன்று! பூ பூக்கின்ற மெல்லிய ஓசை செடி அறிந்திடும் பெண் மனசில் பூக்கின்ற காதலின் பாஷை அவள் கண்ணில் புரிந்திடும்! விழியாலே அழைப்பாள் விரதங்கள் உடைப்பாள் மெளன மொழி பேசுவாள் மயக்கத்தில் ஆழ்த்துவாள் முதல் ஸ்பரிசத்தில் இதயத்தில் சிறகு முளைக்கும் அவள் அருகிருந்தால் எல்லாமே அந்நியமாகும்! காதல் சொல்வ

யாழ் களக் கிறுக்கல்கள் - VIII

கிறுக்கல் 24: வாழ்கின்றேன் என்று தான் சொல்கிறாய் நீயும் உண்மையில் வாழ்தல் என்றால் என்ன? சூரியனுக்குப் பின் எழுந்து பல் துலக்கி தேநீர் தயாரித்து குடித்து முடிய கணினியின் உயிர் பொத்தான் அழுத்தி இணையத்தில் கொஞ்சம் நடந்து திரிந்து நாலைந்து தொ(ல்)லை பேசி நேரம் கரைத்து மதியம் ஏதேனும் சமைத்துப் புசித்து குட்டித் தூக்கத்தில் தேகக் களைப்பகற்றி மீண்டும் கணினி,இணையம் இரவுணவு என்று அதே பழைய பல்லவி பாடி நீயும் சொல்கிறாய் வாழ்கின்றேன் என்று! என்ன இது காலத்தின் கை பிடித்து நடை பழகாமல் என் விதி இதுவென மண்வாரித் தூற்றி சந்தோசம் தொலைக்கின்றாய்! நான் சொன்னது கேட்டாய் சொல்லாத சேதி எல்லாம் உய்த்தறிந்து சொல்லாததும் புரிவாய்! உலக இயக்கம் இம்மியும் நிற்காது விலகி நிற்பதால் விந்தைகள் நடக்காது விம்மி நீ அழுதால் கையொன்று நீளவேண்டும் உனை நோக்கியும்! தொட்டுத் துடைக்க கையொன்று நீளும்மெனின் பொய்கை போல் நீர் கொண்டு கண்கள் அழுவதில் கூட சுகமுண்

யாழ் களக் கிறுக்கல்கள் - VII

Image
கிறுக்கல் 20: தவிக்கின்றேன் மெத்தை மேல் நான் அத்தை பெத்த அருமை அத்தானே அங்கங்கே தொடுகின்றாய் அங்கங்கள் வலிக்காமல்... இதழில் இளைப்பாற வேண்டுமென்கிறாய் - என் நுதலில் இதழ் ஒத்தடம் தருகின்றாய் மஞ்சமென என் நெஞ்சில் தலைசாய்கின்றாய் கொஞ்சமோ நீ செய்யும் கூத்து...? இன்னும் இன்னும் வேண்டுமென கெஞ்ச வைக்கின்றாய் நொடிக்கொரு முறை சொர்க்கத்தில் தூங்கவைக்கின்றாய் எல்லாம் சொர்பனமாய் தோன்றுதடா கண்விழிக்க நிஜத்தில் எப்போதடா புரிவாய் எல்லாம்?   ----------------- கிறுக்கல் 21: தேடுகின்றாய் நீயும் எனக்குள் உறங்கும் இன்னொருவனை... சூடுகின்ற மலரிலும் சுந்தரத் தமிழிலும் பாடுகின்ற பட்சியின் குரல் விநோதத்திலும் என் வாசம் கலந்திருக்கும்! காது திருப்பி மெய் சிலிர்த்து மனசுக்குள் உள்வாங்கு வடிவாய் விஷ்வரூபமாவேன்! நண்பனாய் நான் சிரிப்பேன் நல்ல உள்ளதோடு உனை அணைப்பேன்! கண்களை மூடி நீ தூங்கு கண்டறியாத உலகம் காறியுமிழும் விடு... விழி மூடி தியான

யாழ் களக் கிறுக்கல்கள் - VI

கிறுக்கல் 17: இருட்டுக்குள் இருப்பதாக சொல்பவர்களே ஒரு விளக்கேற்றும் அறிவில்லையா? 'அறிவு' இருட்டுக்குள் இருக்குமெனின் சிந்தனைத் திரிதூண்டியை திருகுங்கள் அடுத்தவரின் அனுதாபத்திற்காக ஏங்கின்றீர்கள் வேண்டாமே... இந்தச் சமூகம் வேதனைப்படும் போதும் வேர்வை வடிக்கும் போதும் வேடிக்கை பார்பதோடு சரி தொட்டு அணைத்து தோளில் சாய்த்து ஆறுதல் தராது அறிவுரைகள் தருவதில் என்ன பயன்? வேண்டாம் வெங்காயமும் இந்த வேடிக்கைச் சமூகமும்!   ----------------- கிறுக்கல் 18:   எப்போது கண்ணே என் தேசம் விடியும்? கடிகார முள் சுற்றுகிறதே தவிர எம் வாழ்க்கை இன்னும் சூனியமாய்... சுழன்றடித்த காற்றில் பறந்து போன சருகுகள் போல ஆளுக்கு ஒரு பக்கம்! இன்று வரும் நாளை வரும் என்று சொன்னாலும் என்று வரும் என்று தெரியாததால் எம் நம்பிக்கையின் நாடித் துடிப்பும் தளர்கிறது கண்ணே... முற்றத்து மண்ணில் பாயின்றிப் படுத்தாலும் பயங்கரமாய் தூக்கம் வருமே...

யாழ் களக் கிறுக்கல்கள் - V

Image
கிறுக்கல் 14: உயிரே என்றென்னை உருகி அழைத்தவளே... உயிர் மறந்து போனதென்ன? வீணே வாய்பிதற்றுகின்ற வார்த்தைகளை உண்மையென்று நான் உணர்ந்தது தான் என்ன? உண்மைதான் பலரும் மனிதர்களைக் காதலிப்பதை விட வார்த்தைகளைக் காதலிப்பதே அதிகம்...   ----------------- கிறுக்கல் 15:   [Photo - AFP] போதுமென்று நீர் உரைத்தாலும் மனசுக்குள் ஆசை நரைக்கவில்லை... 'சாது'வாக தான் இருப்பீர் காவி தரிப்பீர் ஆனாலும் காரில் வருகின்றீர் வசை சொற்களை வாந்தி எடுக்கின்றீர் மனித நேயம் மலரவேண்டிய மனங்களில் முட்களை பரப்பி முட்டாளாக்குகின்றீர்... பிழைக்கப் பல வழிகள் உண்டய்யா... புத்தன் என்னும் புனிதன் பேரைச் சொல்லிப் பிழைக்க வெட்கமில்லையா? அரசின் கீழிருந்து தியானம் செய்யாமல் அரசில் ஆசை ஏனய்யா? சிரசு தடவிச் சொல்லும் பரிசு கெட்டதனம் இதுவய்யா... புத்தபிட்சு சொல் கேட்டு ஆசோகன் போர்வாள் மறந்தான் லட்சம் பிட்சு கூடி 'போர் செய் ப

யாழ் களக் கிறுக்கல்கள் - IV

கிறுக்கல் 11: மாறும் எல்லாமே ஒரு நாள் மாறும் மாற்றம் என்பதைத் தவிர சீறும் புலியின் சீற்றத்தின் முன்னே சீயங்கள் (சிங்கங்கள்) சிதறி ஓடும் ரணங்கள் ஆறும் வாழக்கை ரம்மியமாய் மாறும் ரகசியமாய்ச் சேர்த்து வைத்த என் ஈழக் காதல் ஐ.நா வில் முழங்கி உலக வீதியில் கேட்கும் ... ஈழம் இன்னொரு சிங்கப்பூராய் ஆகும் எதுவும் தூரமில்லை எழுந்து நடந்தால்!   ----------------- கிறுக்கல் 12: அரங்கேறும் என்பாடல் ஒருநாள் தமிழ்கூறும் உலகெங்கும் எழுந்தாடும் திருநாள் மரமேறும் மந்தியும் மகிழ்தாடும் பலவேறு புதினங்கள் எனைப் புகழ்ந்தெழும் ஒருவாறு தமிழ் உலகாளும் - நாம் உரையாடும் பாஷை தமிழாகும் அழகுத் தமிழாகும்!   ----------------- கிறுக்கல் 13: வாங்கித் தா ஈழத்தை தூக்கத்திலும் துட்டர் பயம் வந்தெழுப்பி 'வா' வென்று உறுமி வசை மொழி பேசி வரிசையாய் ஏற்றுகின்றார் பஸ்சில்... வாழ வழியில்லையாம் கொழும்பில் கோழைகாள் எம்மையடா துரத்துகின்றீர்?

யாழ் களக் கிறுக்கல்கள் - III

கிறுக்கல்கள் தொடர்கிறது...   கிறுக்கல் 08: வாழ்க்கை ஒன்றும் புதிரில்லை நாளைய ஏக்கம் நேற்றை கவலை பலருக்கு... இன்று, இந்த நிமிஷம் நாமிருப்பதே நிஜம்.. இன்றையப் பொழுதைக் கொண்டாடுங்கள் சந்தோஷங்களை ஒத்தி வைக்க இது ஒன்றும் கூட்டத் தொடரில்லை! வாருங்கள் நண்பர்களே வசந்தங்கள் காத்திருப்பதில்லை வசந்தாக்களும் கூடத் தான்!!! ----------------- கிறுக்கல் 09: என்னவளே என்னிதயம் ஆள்பவளே சின்னவளே கறுப்பான என் மேல் மையல் கொண்டவளே இதயப் பொய்கையில் அடிக்கடி அமிர்தம் வார்பவளே வருவேன் மீண்டுமென வார்த்தையால் வருடிச் சென்றவளே எங்கையடி சென்றாய் என்னை விட்டு...? வானை விட்டு நிலவு பிரிந்தால் வானென்ன செய்யும் வாடி என் பெண்ணே முகில் துப்பட்டாவால் உன் மேனி மூடி தொட்டணைக்க உள்ளம் துடிக்குதடி!   ----------------- கிறுக்கல் 10: பிடித்துள்ளது என்று சொன்னாய் நீ ... பிளேன் ஏறி இங்கு வந்த பின் பிடிக்கவில்லை என்றாய் வெறும் தோற்ற மயக்கத்தில்

யாழ் களக் கிறுக்கல்கள் - II

மேலும் சிறு கிறுக்கல்கள்... கிறுக்கல் 04: முரசு கொட்டி முழங்கடா அரசு கட்டில் நடுங்கட்டும் பரிசு தரப்போகிறான் தலைவன் கொலுசு கட்டி ஆடடி குழந்தாய்... கொக்கரிக்கும் கோழிகள் சமையலாகப் போகுது! சிவப்புத் தோல் போர்த்திய நரியடா மகிந்தன் - அவன் திட்டம் எல்லாம் மண்ணாகப் போகுது பண்ணாகப் / Fun ஆகப் பாட்டெழு தம்பி... பலதேசம் கேட்கப் பாடலாம் ஒரு தேசம் தமிழனுக்கென்று வருமடா நாளை அப்போது ஓடிப் போன கூட்டமெல்லாம் வந்தாட்டுமடா வாலை!   ----------------- கிறுக்கல் 05: தெரியாதோ கண்ணே சேதி? வானில் மறுபடியும் புலிப் பாய்ந்த கதை... கிலி பிடித்து கிடக்குதடி சிங்களச் சேனை கெதியாக ஈழம் வரப்போகுதடி துணிவோடு இரடி எந்த நாடு விசா மறுத்தாலும் - எம் ஈழமிருக்கடி...!   ----------------- கிறுக்கல் 06: இருக்கிறேன் நான் இங்கே என்று சொல்லத்தான் ஆசை... சொல்லித் தெரிவதில்லையே பாசம்... மெளனமாகி சோகங்களை எனக்குள் சிலுவையாக்குகின்றேன் யார் வருவார் சேர்ந்து தோள் கொடுக்க?

யாழ் களக் கிறுக்கல்கள் - I

யாழ் களத்தில் , குறிப்பாக கவிதை அந்தாதி ப் பகுதியில் அடியேன் அவ்வப்போது கிறுக்கியவற்றின் தொகுப்பாக இந்தப் பதிவும் இனி வரக்கூடிய சில பதிவுகளும் அமையப்போகின்றன. மற்றவர்களின் முடிவுச் சொல்லை, முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்படுவது கவிதை அந்தாதி... எழுத்தைக் கூர்மைப் படுத்திக்கொள்ள அருமையான இடமாக இதனைக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். அந்த வகையில் அடியேன் எழுதியவற்றில் மிகவும் பிடித்தமானவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ளவிழைகின்றேன். (என் எழுத்திற்கு முதல் ரசிகன் நானே...!) இவற்றின் பாடு பொருள் பல்வேறு முகங்கள் காட்டலாம்... காதல்,காமம்,வீரம்,விநோதம் அவற்றில் சில முகங்கள்... இப்படி எழுதப்பட்ட சிலவற்றை வாசித்தவர்கள் தங்களைத் தாக்குவதாக நினைந்து கொண்டு என்னைக் கோபித்துக் கொண்டதும் உண்டு (அதாவது க.அ பகுதியில் உடன் எழுதியவர்கள்... ) அதற்கு நான் என்ன செய்ய முடியும்... (பொது வாழ்க்கை என்று வந்தால் இதெல்லாம் சகஜம் தானே ராஜா... ) சரி அது நிற்க, முதலில் சில கிறுக்கல்களைப் பார்க்கலாம். (நீயும் உன் கிறுக்கல்களும்... என்று கோபித்துக்கொள்வதாக இருந்தாலும் பின்னூட்டல் மூலம் கோபித்