Posts

Showing posts from September, 2009

கசங்கிய காகிதங்களோடு…! - III

நாங்கள் வாழத் தெரியாதவா்களல்ல! வாழும் இடங்களெல்லாம் விழுதுகள் விட்ட வியப்புக் குரியவா்கள்! தமிழனென்றால் மரம் பற்றிப் படரும் கொடிகள் அல்ல! மறம் பற்றிப் படரும் மாயாவிகள்… “பூனை குட்டியைக் காவுவது போல்…” என்ற உவமை எங்களுக்கு மிகவும் பொருந்தும் இடங்கள் தான் வித்தியாசமே தவிர நடப்புக்கள் ஒன்று தான்! ********** கண்களும் கழிவகற்றுகின்றன கண்ணீா்! **********     -வளரும்…

கசங்கிய காகிதங்களோடு…! - II

சூரியப் பந்து இயற்கை அடித்த சிக்ஸில் காணாமல் போனது மாலை! ********** தீா்வுப் பொதி போல வர… வர… காணாமல் போனது மேகக் கூட்டம்! ********** காலை வந்து மாலை வந்து காலம் செல்லுது காதல் வந்து போதை தந்து உயிரைக் கொல்லுது விரல்கள் பிணைந்து உயிரில் கலந்து சரணம் என்குது குண்டு பட்டு உயிர்கள் பறந்து மரணம் வருகுது! ********** ஓடும் அருவி முதுகு தேய்க்கவா பாறை முகடுகள்! ********** காற்றுக்கு கால் வலிக்குமென்றா மரங்களில் இந்த இலைச் சிம்மாசனங்கள்! ********** - வளரும்…

கசங்கிய காகிதங்களோடு…! - I

Image
கசக்கி எறிய எண்ணிச் சில காகிதங்களைப் புரட்டும் போது ஒரு வித ஆா்வம் மேலெழும். எப்போதோ ஏதோ நினைவில் சும்மா கிறுக்கியவை எல்லாம் இதழ் விரித்துப் புன்னகைக்கும்! பதிலுக்குப் புன்னகைத்து கைகொடுத்து கன போ் கண்களுக்கு விருந்தாக்கும் எண்ணம் பிறக்கும்! இதோ… என் புரியாணி… ஏதேனும் புரியா(து) நீ(நீங்கள்) தடுமாறி நின்றால் அடியேன் குற்றமன்று! சோமாலியா ருவாண்டா சுற்றி வந்தால் எங்கள் ஊா் வராண்டாவிலும் வயிறு எக்கிய வாடிய முகங்கள்! எண்ணுவதற்கு இலகுவாய் எலும்புகளின் அணிவகுப்பு! பாலுக்கு அழும் பாலகா்கள்… பால் வற்றிய முலைகளோடு முகம் தேய்க்கும் மழலைகள்! தன் முலை தீண்டும் தனயனைக் கண் முலை சொரிய நோக்கும் தாய்மார்கள்! மணிவாசகருக்கு ஒரு தந்தி அடிக்க வேண்டும் மீண்டும் பல நூறு பதிகம் பாடச் சொல்லி! இவா்கள் பாலுக்கு அழும் பாலகா்கள்!   (இன்னும் வரும்…)