Posts

Showing posts from December, 2008

புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது...

எத்தனையோ கனவுகளைச் சுமந்து கொண்டு எனக்குத் தெரிந்த மொழியில் கிறுக்கி வருபவன் நான். அந்தக் கிறுக்கல்களை பொறுமையோடு ரசித்து கருத்திட்ட அன்பர்கள் சிலர். கருத்திடாமலே மானசீகமாக வாழ்த்திய அன்பர்கள் பலர்... எங்கிருந்தோ ஒரு உள்ளம் ரசிக்கும் என்ற ஆர்வத்தில் தான் பதிவிடுகிறேன்... இந்த ஆர்வம் பிறக்கின்ற ஆண்டில் இன்னும் பெருக வேண்டும்... இன்னும் பலப் பல எழுதவேண்டும் என்பது என் அவா... அன்பர்கள் தொடர்ந்து அடியேனை ஊக்கப்படுத்தவேண்டும்... குறை நிறைகளை விமர்சிக்க வேண்டும்...  புதிய ஆண்டு... புதிய தீர்மானங்கள்... புதிய கனவுகள்... எல்லோர் கனவுகளும் கால் முளைத்து,  பிறக்கின்ற புத்தாண்டில் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். வாழ்த்துக்களுடன் கவி ரூபன்.  

புள்ளிகள் இடுவோம்...

காலம் இது காட்டும் புள்ளியில் நின்று கொண்டு ஒவ்வொருவராய் முடிந்தளவு புள்ளிகள் இடுவோம்... எங்கிருந்தாலும் மறவாது நீயும் ஒரு புள்ளியிடு புள்ளிகளுக்கு இடையில் தூரம் முக்கியமில்லை புள்ளிகளை இணைப்பது இப்போதெல்லாம் சுலபம்! தள்ளி நின்று புள்ளிகளை வேடிக்கை பார்க்கும் கரும் புள்ளி நீ எனில், இப்போதே போய்விடு! ஆனால், ஒன்றை மறவாதே காலம் கட்டாயம் உன் முகத்தில் செம் புள்ளி குத்தும்! பெரும் புள்ளி சிறு புள்ளி எனும் பேச்சே இங்கில்லை... சிறு துளியில் வந்தவன் தான் நீ ஆகவே சிறு புள்ளிதான் உன்னால் முடியும் என்று சிணுங்காதே...! நீ இங்கிடுகின்ற புள்ளிகள் தான் அண்ணனுக்குத் தெம்பு பிறகென்ன கிடைக்காதோ ஈழம் நீ நம்பு! ஒவ்வொரு தமிழனும் பகைவனுக்கு அம்பு!

ஊரின் நினைவலைகள்...

சொந்தம் சொல்லப் பலருண்டு ஆனாலும் அருகில் எவருண்டு? முந்தநாள் இறங்கி விளையாடியது போல் நினைவில் உள்ள என் வீட்டு முற்றமும் கூடி இருந்து ரசித்த சுற்றமும் போனதெங்கே? ஆளுக்கொரு திசையில் யார் யாரோ போட்டு வைத்த பாதையில் நடக்கின்றோம் எமக்கான பாதை வந்து போவார் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது! வீட்டு வளவில் நின்ற வடலிகளும் உயர்ந்த மனித தோரணை செய்யும் பனைகளும் காற்று வந்து ஓலைகளுக்கிடையில் ஒளித்து விளையாடுகையில் விதம் விதமாய் ஒலி செய்யும்! காய்ந்த ஓலைகள் சில களைத்து விழ குருத்தோலைகள் கைகொட்டிச் சிரிக்கும்! வாழ்க்கையின் வடிவான தத்துவம் அது! எங்கிருந்தோ ஒரு குயில் தன் குரல் செருமி 'ஒரு படப் பாடல்' பாடும்! கழுத்தில் மணி கட்டிய சில காளைகள் காலில் சலங்கை கட்டிய மங்கையரைப் பழித்துச் செல்லும்! அந்தி நேர வானச் சிவப்பைக் காட்டி தன் காதலியின் நிறம் பழிப்பான் காதலன் அவளும் விடாது 'அத்தான் கைவிளக்கை ஏற்று இருட்டில் உன்ன