Posts

Showing posts from October, 2008

உருகும் உயிர்...

Image
  சில நூறு வருடங்கள் சேர்ந்திருந்தேனோ? நெஞ்சத்தில் உன் நினைவை எழுதி இருந்தேனோ? பல நூறு மனிதர்கள் தினம் பார்க்கிறேன் பொய்யாய் முக மலர்ந்து, முறுவல் செய்வதன்றி மெய்யான அத்தனையும் உன்னோடு விட்டு வந்தேன்! காலையில் கண் சிமிட்டும் அந்த முகம் இங்கில்லை காதலோடு 'அருகில் வா' என்றழைக்கும் கைகள் இங்கில்லை என் கையால் சூடாக தேநீர் பரிமாற நீ இங்கில்லை உன் பஞ்சு மார்பில் அணைத்த சுகமெல்லாம் இந்தப் பஞ்சுத் தலையணை தருவதில்லை! 'கிச்சு முச்சு' மூட்டும் உன் விரல்கள் கண்ட பின்னால் 'வீணை என்றெண்ணி ஆணை மீட்டுகிறாள் காண்' என்றெப்போதோ எழுதிய கவி வரிகள் நினைவில் வருமடி பிள்ளை! பொய்யான இந்த வாழ்க்கை போய்த் தொலைய வேண்டும் விரைவிலே... பொல்லாத விதி எழுதும் பேனாவை களவு செய்து புதி விதி வரைய வேண்டும் நம் வாழ்விலே!

நதியோடு...

Image
ஓடுகிறது நதி சலனமேதுமின்றி... யாரோ எறிந்த கல் நதியில் எழுதியது விளங்க முடியாப் புதுக் கவிதை...! படித்துப் பார்த்த பாமரன் சொன்னான் "அலை" அதுவென்று உற்றுப் பார்த்து கவிஞன் சொன்னான் "நதி நடக்கின்ற பாதச் சுவட்டை எறிந்த கல் காட்டிக் கொடுத்தது" என்று! அருகில் வந்த அறிவாளி சொன்னான் "கவனிக்கச் சங்கதி பல உண்டு வேறு திசை நோக்கி நடக்க இந்த வையம் சிறக்குமென்று..." இவை ஏதுமறியாது சலனமின்றி ஓடுகிறது நதி!