Posts

Showing posts from March, 2008

அயடீன் அரசாங்கம்!

Image
குறிப்பு : அயடீன் உணவில் தேவையான அளவு சேர்க்காதபோது ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டது.   கண்டத்தே நஞ்சை வைத்தான் பித்தன் நாம் பிறப்பதற்கு வழி வகுத்த சித்தன் அயடீனால் ஆனதென்ன நஷ்டம்? - எம் கண்டத்தில் தானே அழகற்ற வீக்கம்? மூளையிலும் முழுவளர்ச்சி இல்லை - எம் உடம்பிலும் ஒய்யாரமான நடை இல்லை அயடீன் அரசாட்சி யாரிலும் உண்டு - அது என்னை உன்னைப் பார்த்தா வருவதுண்டு? காரிகையவள் கண்டத்தில் காந்தத் தன்மை இன்றில்லை காரணம் அவள் அயடீன் உண்டதில்லை! கத்தி போலுள்ள புத்தியும் காணமல் போகுதே! கருத்தில் இருத்திக் காரணம் கண்டால் அயடீன் என விடை வருதே! நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி கண்டத்தின் முன்னே குரல்வளையின் இருமருங்கிலும் அரசாட்சி செய்வர் எம் உயிராட்சித் திலகர் தைராய்டு நோய்க்கும் தைலம் ஆகிடும் மருந்து அயடீன் என்றால் அது பொய்யானது இல்லை! மந்தபுத்தி உன் மண்டையில் இருந்தால் கற்றவரும் மற்றவரும் மதியாரே! - உன்னை ஓர் பொருட்டாய் எடுக்காரே! சோம்பிச் சோம்பி நீ திரிந்தால் செல்வம் உன்னைவிட்டுச் சென்றுவிடும் சொந்தமும் உன்னை வெறுத்து ஒதுக்கிவிடும் பெண்ணின் பருவம் மூன்

சொல்வாய் தேவி...

சிவ சக்தியே சிவனவன் பாதியே கடைக் கண் திறந்தே பாராய் காதலாகிக் கசிந்துருகும் பெண்டிர் கடைசியில் கரன்சியில் கொழுத்திருப்பவன் பக்கம் சாயும் மாயம் என்ன கூறாய்? அங்கையில் தாங்கி நின்றாலும் அன்பினை பண்பினை வேண்டாது அளவில் செல்வமும் அலுங்காமல் குலுங்காமல் போய்வர பறக்கும் காரும் பள பளக்கும் பங்களாவும் கேட்பதென்ன கேலிகள் செய்வதென்ன? மங்கை மனம் மங்கைக்கு புரியுமாம் மடையர்கள்! சிவன் சங்கை நெரித்து விடம் அங்கே தங்கச் செய்தவளே... தகவல் சொல்வாய் புரியவில்லையம்மா மங்கையர் குணம் மண்ணில்...! கண்ணில் நீர் வர அழுதே காரியம் செய்வார் உனக்கேதும் தெரியுமோ? என் சித்தம் தெளியச் சொல்வாய் தேவி! ----------------------- 28-05-2007

புன்னகை

Image
"வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்" இதிலென்ன கஞ்சத் தனம்? யார் வீட்டு சங்கதியேனும் சந்திக்கு வந்தால் சீர்கெட்டுப் போனதப்பா அக்குடும்பமென கொடுப்புக்குள் சிரிப்பதுவும் வார்த்தையாலே வாள் சண்டை பிடிப்பதுவும் இருக்கட்டும்... "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும் பழைய பழ மொழியை எத்தனை நாள் காவடி தூக்குவாய்? யோசித்துப் பார்... கேலிப் பேச்சுக்கு மட்டும் உதடுகளுக்கு சிரிக்கக் கற்றுக் கொடுத்தாய்! சிந்தனை மாற்றடா சந்தனக் காற்று மேனி தடுவுகையில் காற்றின் கைகளை தட்டிவிட்டு மெதுவாய் புன்னகை அப்படியே நிலைக் கண்ணாடியில் நின்றுன் மேனி ரசி எத்தனை அழகடா நீ புன்னகைக்கும் போது என உனை நீயே ரசி! கொஞ்ச நாளில் மறப்பாய் கேலிச் சிரிப்பை புன்னகைக்க மட்டுமே உதடுகளுக்கு உத்தரவிடுவாய்! ஒன்று தெரி்ந்து கொள் உன் உதடுகள் புன்னகைக்கும் போதெல்லாம் நீ அழகாவாய்... உன்னைப் பார்ப்பவனும் அழகாவான்... ஆக வீட்டுக்கு வரவேற்பறை போல மனிதனுக்குப் புன்னகை... ஆகவே தயங்காது இன்றே நீயும் புன்னகை...!

மாலினி நினைவுக் கவிதை

Image
மார்ச் 8 (நாளை) பெண்கள் தினம். இதன் வெளிப்பாடாக  பெண் புலி போராளி மாலினியின் நினைவாக எழுதப்பட்ட கவிதையை பதிகின்றேன்...   பாரதி நீ மீண்டும் பிறப்பது சரி! நீ சந்தோசப்பட இங்கே சில சங்கதி உண்டு! அம்மி அரைக்கவும் அடுப்பு ஊதவும் பெண்கள் சபிக்கப்பட்டபோது உன் கவிதைத் தேரில் பெண்ணையிருத்தி நீதி கேட்டவன் நீ! "பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினுள் பெண்கள் நடத்த வந்தோம்" என்று மீசை முறுக்கி பெண் விடுதலை தீ வளர்த்தவன் நீ! திரும்பிப் பாரிங்கே... உன் புருவத்தில் முடிச்சுக்கள் விழும் புகை குழலால் அடுப்பூதியவள் சுடு குழலால் (துப்பாக்கியால்) பகைவன் உயிர் ஊதுகின்றாள்! முறம் காட்டி புலி விரட்டிய பண்டைத் தமிழச்சியின் வீரத் தொடர்ச்சி இது! யாரென்று வியக்கின்றாயா பாரதி? பார் அது தான் நம் புலி வேந்தன் பிரபா கட்டியெழுப்பிய பெண் விடுதலைப் புலிகள்! பலே பிரபா! என்று உற்சாகத்தில் உன் உதடுகள் உச்சரிப்பது புரிகிறது! இன்னும் என்ன யோசனை? மீண்டும் பிறந்து வா எங்கள் ஈழ மண்ணிலே இந்திய சுதந்திர வேள்வியில் பாட்டுக்களை வேட்டுக்கள் ஆக்கியவனே... உன் கைவண்ணத்தை இங்கேயும் காட்டலாம் வா... புலி