Posts

Showing posts from November, 2007

பருவகால வாழ்த்துக்கள்...

உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழுள்ள நிரலை பிரதிசெய்யுங்கள்... <embed pluginspage=" http://www.macromedia.com/go/getflashplayer" src="http://kavipura.itbridgelk.com/blog_movie/greet.swf" width="165" height="250" type="application/x-shockwave-flash"></embed>

இவன் ஒரு சிவன்!

இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள்  புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!

தீப ஒளி வாழ்த்துகள்...

Image
காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும்.   அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா?   எதிர்பார்ப்புடன்... இக்கவிதை...     பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் துன்பமெல்லாம் சுட்டுப் பொசுங்கும் இனி! திரைகடல் மீதில் தீபம் விடுவோம் - அந்தத் திங்களவனை விருந்துக்கழைப்போம்! வீணை தீண்ட விரல்கள் என்போம் விசைகள் தீண்டும் விரலை அவிப்போம்! பாசாங்கில்லாப் பெண்ணை மதிப்போம் பழகுவதற்கினிய அன்பை வளர்ப்போம் போருக்கு ஒரு போர்வை கொடுப்போம் வெள்ளைப் புறாவை எங்கும் பறக்கவிடுவோம்...   ___________________________________________

தீபாவளி வாழ்த்துக்கள்...

Image

ஏய் பகையே... அடாது செய்தாய்!

Image
காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடாது எம் வீரர் பகை! இன்னொரு பெரும் தோல்விக்காக காத்திரு! ------------- 03-11-2007 (படம் உபயம் : pathivu.com. நன்றி)