Posts

Showing posts from October, 2007

படம் பார் கவி எழுது - I

Image
கீழே இணைக்கப்பட்டுள்ள படம் பார்த்து கற்பனைக் குதிரைகளை தட்டி விடுங்கள். வடிவான கவிதைகள் இணைக்கப்படும்...  

சுடும் நினைவு

கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்பதும் 'இன்னும் கொஞ்சம் திட்டேனடி' என்று ஏங்க வைக்குமே! சொல்லச் சொல்ல ஊறுதடி பல நினைவு உன்னை நினைத்திருக்கின்ற சுகம் பெரிது!

காதல் பிரிவு - சில கீற்றுக்கள்

கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?

பகையோடும் வேளை!

ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!